Header Ads



ரிசாட்டிற்கு எதிராக, வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளரின் கூற்று மடத்தனமானது என பாராளுமன்றில் ரிசாட் பதீயூதின் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வளாகத்தில் பிரதேச சபை உறுப்பினர்களினால் இன்று (24) காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

பம்பைமடு குப்பை மேடு விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குப்பை மேட்டிற்கு அருகேயுள்ள மக்கள் தற்போது குடியேறியவர்கள் குப்பைமேடு பல வருடங்களாக இங்கு உள்ளது என தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதீயூதின் தவிசாளர் தற்போது குடியேறிய மக்கள் என தெரிவித்தமையினையை ஒரு மடமைத்தனமாக விடயமென கூறியிருந்தார். 

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதீயூதின் தவிசாளரின் கூற்றினை மடமைத்தனமானது என தெரிவித்தமையினை வாபர்ஸ் பெற வேண்டும் என தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றம் செய்தது யார்?, மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தெரியாதா குடியேற்றத்தை குப்பை மேட்டிற்கு அருகில் செய்யக்கூடாது என்று, குப்பைகளை எங்கே போடுவது, எமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு கண்டணம் போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

பிரதேச சபை உறுப்பினர்கள் 30 நிமிடங்கள் பிரதேச சபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments

Powered by Blogger.