Header Ads



ரஞ்சனின் நடவடிக்கையினால், இலங்கைக்கு சர்வதேசத்திலும் அவமானம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கும் என உலக இலங்கையர் பேரவையின் செயலாளர் யயஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.

இலங்கையின் நீதிமன்றங்கள் சுயாதீனமானவை அல்ல என மனித உரிமை ஆணைக்குழு சுடத்திய குற்றச்சாட்டு இந்த குரல் பதிவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இலங்கையின் நீதிமன்றங்கள் சுயாதீனமானவை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இலங்கையின் நீதிமன்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ ஐ.நாவின் விசேட தூதுவர்களுக்கோ முடியாமல் போயிருந்தது.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக இலங்கை பற்றி விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்காக வழியேற்பட்டுள்ளது.

இந்த குரல் பதிவு தொடர்பான விடயங்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.