Header Ads



முஸ்லிம் தலைவர்களை, மேடையேற்றாதிருக்க தீர்மானிக்கப்பட்டதா..?


”சஜித் ஆதரவாளர்கள் இணைந்து ஏற்படுத்தப் போகும் கூட்டணி தோல்வியை சந்திக்கப்போவதை நான் அறிவேன். தோல்வியடையும் கூட்டணிக்கு தலைமை வகிக்க நான் விரும்பவில்லை.அதனால் தான் அதனை விட்டுக்கொடுத்தேன்..” இவ்வாறு நேற்றிரவு தனது நெருக்கமான சகாக்கள் பலருடன் மனம்விட்டுப் பேசும்போது தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைவது குறித்து தனது நெருக்கமான சிலருடன் பேசிய ரணில் மேலும் கூறியிருப்பதாவது ,

” கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிதானமாக ஒரு முடிவை எடுக்காமல் வெளியாரின் அழுத்தங்களால் முடிவுகள் எடுக்கப்பட்டதால் தோல்வியை சந்தித்தோம்.இம்முறையும் அது தொடர்கிறது.எனவேதான் தோற்கப்போகும் கூட்டணிக்கு தலைமை வகிக்க நான் விரும்பவில்லை.அந்த கூட்டணி தோற்றால் அது அஸ்தமனமாகிவிடும்.

அதேபோல்பாராளும தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேட்புமனுக் குழுவின் தலைவர் பதவியையும் சஜித்துக்கு கொடுத்துள்ளேன்.அவர்கள் அநீதியாக தீர்மானங்களை எடுத்தால் நானும் அப்போது தீர்மானங்களை எடுப்பேன்.கூட்டணியின் முக்கிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்பதால் அதன் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க நான் கோரிக்கை விடுத்துள்ளேன்..”

என்றும் குறிப்பிட்டுள்ளார் ரணில்.

இதற்கிடையில் பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாஸ அணி, வரும் தேர்தலில் தென் பகுதிகளில் நடைபெறும் எந்தக் கூட்டங்களுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை மேடையேற்றாதிருக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிந்தது.

-சிவா ராமசாமி -

3 comments:

  1. காலம் கடந்த ஞானம்!

    ReplyDelete
  2. Ranil double game.
    Anybody dont like ranil.
    But he put the blame to sajith.ladt 5years ranil and My3 spoiled the country and party.
    Ranil still playing fox game

    ReplyDelete
  3. சஜித் பெரிய இன வாதி என்பதை முஸ்லிம்கள் இன்னும் அறியாமலிருக்கின்றனர் / முஸ்லீம் அரசியல்வாதிக்கு தொங்க கயிறு இல்லை ,......அதனால் அவன் பின்னால் ............ முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போது சஜித் அனுதாபம் சொல்லவில்லையே , இவர்களை விட ஜனாதிபதி கோத்தாபே ; நேர்மையான மனிதன்

    ReplyDelete

Powered by Blogger.