Header Ads



ஈரான் மக்களை, அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும், ஆயதுல்லா அலி காமேனி

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அதி உயர் தலைவர், இரானின் பாதுகாப்பு படைகளை ஆதரித்து பேசியுள்ளார்.

உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, இரானின் புரட்சிகர பாதுகாப்பு படை பொறுப்பேற்றுள்ளதாக கூறிய அவர். அந்தப் படை இரானின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார்.

2012க்கு பிறகு, எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார்.

வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நட்த்திய அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி, தொழுகைக்கு பிறகான உரையில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா விதித்த தடைகளால் இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தனது உரையில் அலி காமேனி முக்கியமாக என்ன பேசினார்?

•டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஒரு ''தீய'' அரசு என விமர்சித்தார்.

•இரான் மக்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தும்போதெல்லாம் பொய் கூறுவதாக தெரிவித்த அவர், இரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும் என கூறினார்.

•இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ''அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை'' என அவர் தெரிவித்தார்.

•அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ள இரானின் உயரடுக்கு பாதுகாப்பு படை பற்றி பேசிய அவர், ''அது மனித மதிப்புகளை கொண்டிருக்கும் ஒரு மனிதநேய அமைப்பு" என குறிப்பிட்டார்.

•காசெம் சுலேமானீயின் இறுதிச் சடங்கு மற்றும் இரானின் பதிலடி ஆகியவை வரலாற்றில் ஏற்பட்ட திருப்புமுனை என அவர் கூறினார்.

1 comment:

  1. Drump's foreign policies and strategies as well as US dangerous secret weapons used in attempt to kill enemies could set off world war 3 by which America may leave her last breath

    ReplyDelete

Powered by Blogger.