Header Ads



இலங்கையில் விசித்திரமான, ஒரு பாடசாலை


மத்திய மாகாணத்தின் கல்லேவெல கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஒரே ஒரு மாணவன் கல்வி கற்பதாக தெரியவந்துள்ளது.

1961ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த பாடசாலையில் ஒரேயொரு மாணவன் கற்கின்ற நிலையில் 4 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலையில் போதுமான வசதிகள் இல்லாமையினால் மாணவர்கள் இங்கு கற்க விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்காக புதிதாக 3 மாணர்கள் நேற்று முன்தினம் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒரேயொரு மாணவனை கொண்டு இயங்கிய பாடசாலைக்கு புதிதாக மூவர் இணைந்துள்ளமை சிறப்பான ஆரம்பம் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலையை கூடிய விரைவில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.