Header Ads



பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு, நோயை தேடிக் கொடுக்கின்றனர் - அதிபர் பரீட்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பிள்ளைகளின் ஆரோக்கியம் என்பது உடல் பருமனில் இல்லை நல்ல உணவு வகைகளிலே உள்ளது என்று வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம் பாடசாலையில் நடைபெற்றது அதில் தலைமை தாங்கிப் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

கடந்த காலங்களிலே தாய்மார்கள் விறகு வெட்டுவார்காள், வாசல் கூட்டுவார்கள், அம்மி அரைப்பார்கள், நெல் குத்தி காய வைப்பார்கள் இவ்வாறு பல்வேறு வேலைகளை செய்வார்கள் அவைகள் அவர்களுக்கு உடற்பயிற்சிகளாக இருந்தது. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்கள் இல்லாமையால் நோய் வாய்ப்பட்டு காணப்படுகின்றார்கள்.

அந்தக் காலத்திலுள்ள தாய்மார்கள் பத்துப் பிள்ளைகளைப் பெற்று தேகாரோக்கியத்தோடு இருக்கின்றார்கள் காரணம் அவர்கள் அன்று உட்கொண்ட ஆரோக்கியமான உணவுகளாகும். ஆனால் இன்றைய கலாச்சாரம் மாற்றமடைந்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணத்தைக் கொடுப்பதினால் பராட்டாவையும், இரசாயனப் பொருட்களையும் வாங்கி உட்கொண்டு நோயை தேடிக் கொள்கின்றனர் இதற்கெல்லாம் பெற்றோர்கள்தான் காரணம்.

பிள்ளைகள் புத்தியுள்ள, கற்றலில் ஆர்வம் கொண்ட பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றால் உடல் மற்றும் மூலை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதற்கான போஷாக்கு பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும்.

பெற்றோர்களாகிய நீங்கள் வயலிலும், கடலிலும் கஸ்டப்படுவது  பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் எனவே பிள்ளைகளின் ஆரோக்கிய விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள் அவர்களுக்கு சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொடுங்கள் என்றார்.

1 comment:

Powered by Blogger.