Header Ads



ஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்கள் அதனை தற்போது தேடிக்கொண்டிருக்கின்றனர் எனவும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் ஊடகப் பணிப்பாளர் சீரரத்ன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் முக்கிய திட்டம் ஒன்று இருக்கின்றது. அந்த தாக்குதல் நடக்க இடமளித்து விட்டு இவர்கள் ஏன் பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவை நியமித்தாலும் அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என சிலரை கைது செய்தாலும் தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பதை எந்த ஆணைக்குழுவும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த தாக்குதலின் பின்னணியில் 6.9 பில்லியன் ரூபாய் அதாவது 38.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரச கொள்கை ரீதியான திட்டம் இருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இதுவே இருக்கின்றது. வேறு எதுவுமில்லை. பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டம். அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த ரயில் தடம்புரண்டது. இதனையடுத்து ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. தற்போது ரயில் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

6.9 பில்லியன் ரூபாய் பெறுமதியான அரச கொள்கை ரீதியான திட்டத்திற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடக்க இடமளித்து விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர். இது அரச ராஜதந்திரம். அதில் அரசியலும் இருக்கின்றது.

அதேபோல் அதன் கீழ் பண குவியலும் இருக்கின்றது. அந்த பண குவியல் பனி மலையின் உச்சி மாத்திரமே. அதற்கும் கீழ் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் இருக்கின்றன.

அதற்காகவே அப்பாவி மக்கள் கொல்லப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்தனர். புலனாய்வு அதிகாரிகள் இல்லாமல் இல்லை. செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் போதும் அரச புலனாய்வாளர்கள் வருகின்றனர்.

இராணுவ புலனாய்வு பிரிவு இருக்கின்றது. நாங்கள் ஒரு கடிதத்தை வழங்க செல்லும் போது அந்த இடங்களில் அரச புலனாய்வு சேவையைச் சேர்ந்த 10, 15 பேர் அந்த இடங்களில் சுற்றியும் இருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்திய சஹ்ரான் புகைப்படம் இவர்களுக்கு தெரியாதா?. ஏன் உள்ளே வரும் போது அவரை கண்டு தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏன் கண்டும் காணாதவர்கள் போல் இருந்தனர். அதன் பின்னால் இருக்கும் பணமே இதற்கு காரணம். ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பெருந்தொகை பணம் இருக்கின்றது.

பணம் தொடர்பான கதைகளை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம். அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். இந்த விடயம் தொடர்பாக சகல தகவல்களையும் சாட்சியங்களுடன் வெளியிடுவோம்.

பாதுகாப்பு அமைச்சும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், நான் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று வினவினேன், அவர்கள் பதிலளிக்க அஞ்சுகிறார்கள்.

பொறுத்து இருந்து பார்ப்போம், அவர்கள் பதிலளித்ததும் சகல விடயங்களுடன் நாங்கள் செய்தியாளர்களை சந்திப்போம் எனவும் சீரரத்ன அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. விஷவாயு குண்டுகளும் ஆயுதங்களும் தயாரிப்பதைத் தடுத்து உலகில் சமாதானத்தை நிறுவ எவ்வாறு அமெரிக்கா ஈராக்கில் நுழைந்து மக்களைக் கொன்றொழித்து அந்த நாட்டின் அரும் பொக்கஷங்களையும் இயற்கை வளங்களையும் எவ்வாறு அமெரிக்கா சூறையாடியதோ அதன் உண்மை எவ்வாறு 20 -25 வருடங்களின் பின் வௌிவந்தததோ அதே போல எப்ரல் ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் உண்மைகள் வௌிவர இன்னும் குறைந்தது இரண்டு தசாப்தங்களாவது செல்லும். அப்போது பெரும்பாலும் அந்த அநியாயத்தைச் செய்த கொலையாளிகள் பெரும்பாலும் நரகம் சென்றிருப்பார்கள்.

    ReplyDelete
  2. This is very clear that Islamic terrorist have planned the attack to kill Tamil Christian.They have selected the time they have Tamil prayers in those churches, knowing all this Sinhalese security forces turned blind eye and allowed the extremists to carryout the attack.But unexpectedly Sinhalese Christians also got killed in these attacks.

    ReplyDelete

Powered by Blogger.