January 06, 2020

ரஞ்சனை மீண்டும் கைதுசெய்ய வலியுறுத்து - துமிந்த மரண தண்டனை தீர்ப்பில், அழுத்தம் கொடுத்தாரா..?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக மேல்நீதிமன்ற நீதியரசர் பத்மினி எம். ரணவக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக அழுத்தம் கொடுத்ததாக தாய்நாட்டுக்கான இராணுவத்தினர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் இணைப்பாளரான ஓய்வுபெற்ற முன்னாள் மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

துமிந்தவை சிறைக்கு அனுப்புவது உங்களது இலக்காகவும்இ எனது இலக்காகவும்இ ஹிருணிகாவின் தாயாரின் இலக்காகவும் உள்ளதாக ஷாணி அபேசேகரவுக்கு ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

அப்படியானால்இ துமிந்தவின் வழக்கு தொடர்பான மூவரடங்கிய நீதாயத்தின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே ஷாணி அபேசேகரவுக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இடையிலான இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான குரல் பதிவு ஒன்றையும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன வெளியிட்டுள்ளார்.

அந்த வழக்கு தொடர்பில் எவருடனும் உரையாட வேண்டாம்.

பாரிய பிரச்சினையாகும் என ஒருவர் அந்த குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதுஇ குறித்த பெண் நீதியரிடம் தாம் கூறிய விடயத்தை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கஇ இது அழுத்த அல்ல என்றும்இ 9 ஆம் திகதி தீர்ப்பு தொடர்பில் முழு நாடும் எதிர்ப்பார்த்திருக்கிறது என்றும்இ உங்கள் மீது பாரிய நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போதுஇ கருத்து தெரிவித்துள்ள அந்த பெண் நீதியரசர்இ என்ன பிரச்சினை என்று வினவியதாகவும்இ சிலர் வந்திருப்பதாக தெரிவித்துஇ பின்னர் உரையாடுவதாக கூறி அவர் அழைப்பை துண்டித்ததாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்இ குறித்த குரல் பதிவு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அஜித் பிரசன்னஇ 9ஆம் திகதி வழக்கு என்பதுஇ பாரதலக்ஷ்மன் பிரேமசந்ரவை கொலைசெய்ததாக துமிந்த சில்வா உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கிய வழக்காகும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வழக்கின் நீதாயத்தில் இருந்த ஒரு நீதியரசர் பதிமினி எம். ரணவக்க ஆவார்.

வழக்கின் விசாரணை நடவடிக்கையானது நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பனவற்றில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துஇ குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாதமைதயினால் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதாயத்தின் தவிசாளரான நீதியரசர் ஏ.எல்.ஷிராணி குணரத்ன இதனை கூறியதாக அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம்இ ஏனைய இரு நீதியர்களின் பதிமினி எம். ரணவக்க மற்றும் எம்.சி.பீ.எஸ் மொறாயஸ் ஆகியோரின் தீர்ப்பானதுஇ துமிந்த சில்வா உள்ளிட்டோருக்கு மரண தண்டனை வழங்குவதாக அமைந்திருந்தது.

எனவேஇ நீதியரசர் பத்மினி ரணவக்கவுக்குதான்இ ரஞ்சன் ராமநாயக்கஇ வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக தொலைபேசி உரையாடியதாக தாய்நாட்டுக்கான இராணுவத்தினர் அமைப்பின் இணைப்பாளர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்இ தற்போது வெளியாகியுள்ள தகவலுக்கு அமையஇ ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோரை கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 கருத்துரைகள்:

​மேற்படி கட்டுரை பாமினி அல்லது அதுபோன்ற எழுத்தில் தட்டச்சி செய்யப்பட்டு இணையத்தளம் மூலம் யுனிகோர்ட் எழுத்துக்கு மாற்றம் செய்து அப்படியே இங்கு வௌியிடப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றம் செய்யும் போது கொமா என்பது இ எழுத்தாக இருக்கும் அவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய முன்பு திருத்தப்பட வேண்டும். அவ்வாறு எந்த திருத்தமும் செய்யாமல் அப்படியே இங்கு பிரசுரித்திருப்பது பதிப்பாசிரியரின் கவனயீனம் அல்லது வாசகர்கள் பற்றிய எந்த சிந்தனையுமின்றி கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பாரதூரமான தவறு. சிங்களம்,ஆங்கில மொழியாக்கங்களில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் இடம்பெறுவதில்லை. தயவு செய்து தமிழ் வாசகர்களை பகடைக்காய்களாக கருதும் இந்த போக்ைக உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஆசிரியரைக் கேட்கின்றேன்.

Post a Comment