Header Ads



தமிழ் - முஸ்லிம் தரப்­புக்களின் கூட்டு எச்­ச­ரிக்கை

- ஆர்.ராம் -

ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பிர­தி­ப­லிப்­புக்­களை அடி­யொற்றி தொடர்ந்தும் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­னது இனங்கள் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தப்­படும் பேரா­பத்­தையே தோற்­று­விக்கும் என்று தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன. 

நாட்டின் சுபீட்­சத்­தையும், எதிர்­கா­லத்­தி­னையும் கருத்­திற்­கொண்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் மன­நி­லை­யிலும் அவ­ரது போக்­கிலும் மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்றும் அத்­த­ரப்­புக்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. 

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்~ நேற்று முன்­தினம் ஆற்­றிய அக்­கி­ரா­சன உரை­யின்­போது, குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்­த­வர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆகவே பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை என்றும் மதிக்க வேண்டும். அப்­போது தான் மக்­களின் இறை­யாண்­மையை பாது­காக்க முடியும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் ஒற்றை ஆட்­சியை பாது­காப்பேன் என்றும் பௌத்த சம­யத்­திற்கு முதன்­மைத்­தா­னத்­தினை காப்பேன் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பழனி திகாம்­பரம் ஆகியோர் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். அவர்கள் கருத்­துக்கள் வரு­மாறு, 

சுமந்­திரன் எம்.பி கூறு­கையில்,
இனம் சார்ந்த  கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரும் அர­சியல் கட்­சிகள் இந்த நாட்டில் பிரி­வி­னையை தோற்­று­விக்­கின்­றன என்ற நிலைப்­பாட்­டினை ஜனா­தி­பதி தனது உரையில் வெளிப்­ப­டுத்­து­கின்றார். 

அத்­துடன் இனம்­சார்ந்து செயற்­படும் அர­சியல் கட்­சிகள் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற தொனி­யுடன்  அவர்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும் சித்­த­ரித்­துள்ளார். 

இலங்கை பாரம்­ப­ரிய பல்­லினக் குழு­மங்­களைக் கொண்ட நாடாகும். அவ்­வா­றான பன்­மைத்­துவ நாட்டில் தனக்கு வாக்­க­ளித்த பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­பினை நிறை­வேற்றும் வகை­யி­லேயே அனைத்து இனக்­கு­ழு­மங்­களும் செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை எடுப்­பது பொருத்­த­மா­ன­தொன்­றல்ல.

இவ்­வா­றான நிலைப்­பா­டா­னது பேரி­ன­வாத சிந்­த­னையின் வெளிப்­பா­டா­கவே இருக்­கின்­றது. ஆகவே அந்­தக்­க­ருத்­தினை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. இத்­த­கைய நிலைப்­பா­டுகள் தொட­ரு­கின்ற போது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சல்கள் மேலும் அதி­க­ரித்துச் செல்லும் நிலை­மையே ஏற்­படும் என்­பதை ஜனா­தி­பதி புரிந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார். 

ரவூப் ஹக்கீம் எம்.பி கூறு­கையில், புதிய ஜனா­தி­பதி ஆட்­சிப்­பொ­றுப்­பினை ஏற்ற நாள் முதல் தற்­போது வரையில் பெரும்­பான்­மை­யின ஆத­ரவு என்ற மன­நி­லை­யி­லேயே தான் அனைத்து விட­யங்­க­ளையும் அணுகி வரு­கின்றார். ஆரம்­பத்­தி­லே­யி­ருந்­தான இந்த அணு­கு­மு­றையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. 

ஜன­நா­யக விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் மக்­களின் தீர்ப்­பினை மதிக்க வேண்­டி­யது அர­சியல் தலை­மை­யொன்றின் கட­மை­யா­கின்­றது. அவ்­வா­றி­ருக்க அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி புஷ்ஷின் நிலைப்­பாட்­டினை ஒத்­த­வாறு, தனக்கு வாக்­க­ளிக்­கா­த­வர்கள் அனை­வரும் தனக்கு எதி­ரா­ன­வர்கள் என்ற மன­நி­லையில் செயற்­ப­டு­வது இந்த நாட்­டிற்கு பொருத்­த­மற்­ற­தொரு செயற்­பா­டாகும். மேலும் இந்த மன­நி­லைப்­போக்­கினை வர­லாறு நிச்­ச­ய­மாக பொய்ப்­பிக்கும் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

தனக்கு வாக்­க­ளிக்­காத மக்­களின் அபி­லா­ஷை­களை உணர்ந்து அவர்­க­ளையும் தன்­னுடன் அடுத்­து­வரும் காலத்தில் எவ்­வாறு அர­வ­ணைத்துச் செல்­வ­தென்­பது பற்றி சிந்­திக்கும் மன­நிலை தற்­போது வரையில் உரு­வா­கது இருக்­கின்­ற­மை­யா­னது ஆரோக்­கி­ய­மான விட­ய­மொன்­றல்ல. தேர்தல் வெற்­றிக்குப் பின்­னரும், இனம்­சார்ந்து செயற்­படும் அர­சியல் தரப்­புக்­களை தீவி­ர­வா­திகள் என்று முத்­தி­ரை­யி­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­வி­ட­ய­மாகும். 

தமது இனம் சார்ந்து செயற்­படும் சிறு­பான்மை தேசிய இனங்கள் இன­வாதக் தரப்­புக்கள் என்றால் பெரும்­பான்மை இனம்­சார்ந்து செயற்­படும் கட்­சி­களை எவ்­வாறு அழைப்­பது என்ற கேள்­வியும் இங்கு எழு­கின்­றது. இத்­த­கைய போக்­குகள் மக்கள் மத்­தியில் பீதி­யான மன­நி­லை­யையே தோற்­று­விக்­கின்­றன. 

ஆகவே ,ஜன­நா­யக முடி­வு­களை ஏற்­றுக்­கொள்­ளாது எதி­ரா­ளிகள் என்ற போக்­கிலும் மொழி, மதம், இனம் என அனைத்­திலும் பெரும்­பான்­மை­வாத எண்­ணப்­போக்கில் தலை­வர்கள் பிர­தி­ப­லிக்­கின்­ற­மை­யா­னது பல்­லி­னங்கள் வாழும் இந்த நாட்டில் அவற்­றுக்­கி­டையில் மென்­மேலும் துரு­வப்­ப­டுத்­தல்­க­ளையே அதி­க­ரிக்கச் செய்யும். அவ்­வா­றான நிலை­மைகள் மோச­மான பின்­வி­ளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும் என்றார். 

ரிஷாத்   பதி­யுதீன் எம்.பி கூறு­கையில்,
முஸ்­லிம்கள் என்­றுமே வன்­மு­றையை விரும்­பி­ய­வர்கள் கிடை­யாது. பிரி­வி­னையை ஏற்­றுக்­கொள்­ளவும் இல்லை. ஐக்­கிய இலங்­கைக்குள் தலை­நி­மிர்ந்து வாழவே விரும்­பு­கின்­றார்கள். ஆகவே அவர்­களின் விருப்பு வெறுப்­புக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு சகல உரித்தும் அவர்­க­ளுக்கு உள்­ளது. தமது ஜன­நா­யக கட­மையில் அவர்­களின் வெளிப்­பா­டு­களை நாட்டின் எதிர்­காலம் பற்­றிய கரி­ச­னை­கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி தவ­றாக புரிந்­து­கொள்­வதே தவ­றாகும்.

மேலும் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்~  இன­வாத அர­சி­யலை கைவி­டு­மாறு தமது இனம் சார்ந்து செயற்­படும் சிறு­பான்மை தரப்­புக்­களை இலக்­காக வைத்து கூறு­கின்றார். ஆனால் பெரும்­பான்மை தேசிய கட்­சி­களின் வெளிப்­பா­டு­க­ளையும் அவர் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மா­கின்­றது. 

இந்த நாட்­டினை பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்­ற­ம­டையச் செய்ய வேண்டும் என்­ப­தையே இலக்­காக கொண்­டி­ருப்­ப­தாக கூறும் ஜனா­தி­பதி, அதற்­கான அடிப்­ப­டை­க­ளையே முதலில் மேற்­கொள்ள வேண்டும். சிங்­கப்பூர், மலே­ஷியா போன்ற பல்­லின நாடுகள் அபி­வி­ருத்­தியில் மேலோங்கித் திகழ்­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கமே காணப்­ப­டு­கின்­றது. 

ஆகவே வாக்களிப்பினை மையப்படுத்திய மனநிலையில் செயற்படுவதானது இனங்களுக்கிடையில் மேலும் இடைவெளிகளையே ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

திகாம்பரம் எம்.பி கூறுகையில்,
உள்நாட்டுப்போரை வெற்றி கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வினால் சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடிந்திருக்கவில்லை. இதன் காரணத்தினாலேயே அவருடைய ஆட்சி சரிந்தது. 

இந்நிலையில் அவருடைய சகோதரராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவாவது சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக பெரும்பான்மையின சிந்தனையில் செயற்பட விழைவதானது இனங்களுக்கு இடையிலான விரிசல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றார். 

4 comments:

  1. BUDDA MATHATHUKKU MUNNURIMAI KODUPPEN
    ENRU SAJITH,SHONNATHU THAVARILLAI.
    JANATHIPATHI GOTABAYA SHONNAL,
    ATHU THAVARU.
    HAKEEMUM, RISHADUMTHAN, MUSLIMGALIN
    MATHTHIYIL, THUVESHATHAI UNDAAKIYAVANKAL
    MUSLIMGALEY KAVANAM.

    ReplyDelete
  2. Imthiyas.. sariyaha sonneergal..

    ReplyDelete
  3. Yes @imthiyas.. eppa MUSLIM samugam inda ivanvalukku vote panrada niruthi, UNP ya thongi kollurada viduvangalo appoluduthan MUSLIM valukku vidivu...NON MUSLIM galukku vote paninalum nallavanakku pannanum...

    ReplyDelete
  4. தமிழர்களோடு சேர்ந்து சமூகத்தை படுகுழியில் தள்ள முஸ்லிம்கள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.