Header Ads



நான் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடுவேன் - ரஞ்ஜன்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தன்னை விலக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தான் தலைவணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக தடை செய்வதற்கு கட்சி எடுத்துள்ள தீர்மானம் குறித்து சகோதர ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

எனக்கு கடிதம் ஒன்றில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இது கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதனால் நான் மதிக்கின்றேன்.

நான் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் ஒருவன். இதனால், கட்சியொன்றில் தொடர்ந்தும் இருப்பது சிரமமானது. கட்சியிலிருந்து விலக்கியதற்காக கட்சிக்கு சேறு அடிக்கும் நடவடிக்கையில் நான் ஈடுபட மாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

நான் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றினால் நாடாளுமன்றம் செல்வேன். தோற்றால் சினிமாத் துறைக்கு செல்வேன்.

இன்னும் எந்தக் கட்சியென்று தீர்மானிக்கவில்லை. நான் சுயாதீனமாக போட்டியிடுகின்றேன் எனக் கூறுவது கட்சிகளுக்கு நான் பொருத்தமாற்றவனாக தோன்றலாம் என்பதனால் ஆகும்.

நான் கட்சிக்காக நிறைய பணியாற்றியுள்ளேன். எனது பெறுமதி பின்னர் கட்சிக்கு விளங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.