Header Ads



ஜனா­தி­பதி கோத்­தா­பய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வ­ரல்ல, சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலே தவறான பிர­சாரம் செய்­யப்­படுகிறது

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ, முஸ்­லிம்கள் சந்­தே­கிப்­பது போன்று அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வ­ரல்ல. சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலே அவர் முஸ்லிம்களுக்­கெ­தி­ரா­னவர் என பிர­சாரம் செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் முஸ்லிம் களுக்கோ அல்­லது வேறோர் இனத்­துக்கோ துரோகம் இழைப்­பவர் அல்ல என எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கண்டி மாவட்­டத்தில் பொது­ஜன பெர­முன கட்­சியில் கள­மி­றங்­க­வுள்ள வேட்­பாளர் தொழி­ல­திபர் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரி­வித்தார்.

கண்டி – மட­வ­ளையில் தனக்­க­ளிக்­கப்­பட்ட வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். மட­வளை ஹப்­பு­கஸ்­தென்­னயைச் சேர்ந்த தொழி­ல­திபர் எம்.இஸட்.எம்.அஸ்­ரியின் இல்­லத்தில் இந்­நி­கழ்வு இடம்­பெற்­றது.

நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­நி­கழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது,

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் எனக்கும் நீண்­ட­கால உறவு இருக்­கி­றது. அந்த உறவின் அடிப்­ப­டையில் அவ­ரைப்­பற்றி நான் நன்கு புரிந்­து­வைத்­துள்ளேன். அவர் முஸ்லிம் சமூ­கத்­திற்கு உரிய தேவை­களை நிறை­வேற்­றுவார் என்­பதில் நம்­பிக்கை இருக்­கி­றது. முஸ்லிம் சமூகம் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் பொது­ஜன பெர­முன கட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­பதன் மூலம் எமக்­கு­ரிய பாது­காப்­பி­னையும் உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடியும். பல தசாப்த கால­மாக குறிப்­பிட்ட ஒரு அர­சியல் கட்­சி­யினை ஆத­ரித்­து­வரும் எமது சமூகம் இன்­று­வரை தமது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வில்லை. பிரச்­சினை களுக்குத் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. எனவே, புதிய அர­சியல் கலா­சா­ரத்தில் நாம் இணைந்­து­கொள்­ள­வேண்டும் என்றார். 

நிகழ்வில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னரும், அகில இலங்கை அரபு மத்­ர­ஸாக்­களின் ஒன்­றிய தலை­வரும், மட­வளை ஜாமியுல் கைராத் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் முன்னாள் தலை­வ­ரு­மான மெள­லவி எம்.எச்.ஏ.புர்கான் உரை­யாற்­று­கையில், முஸ்லிம் சமூ­கத்­தின்பால் ஜனா­தி­பதி மற்றும் பெரும்­பான்மை மக்கள் கொண்­டுள்ள சந்­தே­கங்­களை களையும் பொறுப்பு பொது­ஜன பெரமுன வேட்பாளர் பாரிஸுக்கே இருக்கிறது என்றார்.

நிகழ்வில் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் வஸீர் முக்தார் மற்றும் பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அஸ்ஹர் என்போரும் உரையாற்றினர்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

No comments

Powered by Blogger.