Header Ads



சுவர் ஓவியம் வரைவதில் சிறந்த முன்மாதிரி - முஸ்லிம்களின் வரலாற்றை பகிரங்கப்படுத்துவோம் (படங்கள்)


இலங்கையில் யானை கட்டுவதற்கு பெயர் போன பணிக்கர்களைக் கொண்ட கிராமம் Irakkamam பணிக்கர்களின் பரம்பரையை பறைசாற்றுகின்ற Eravur Umar Lebbe பணிக்கர் அவர்களால் ஸ்ரீ தளதா மாளிகைக்கு யானையை அன்பளிப்புச் செய்த காட்சியை ஞாபகப்படுத்துகின்ற 1000 ரூபா நாணயத்தாளை சுவர் ஓவியம் வரைந்த, இறக்காமத்து கலைஞர் Fahim க்கு வாழ்த்துக்கள்.

Eravur Umar Lebbe வரலாறு!!

ஆயிரம் ரூபாத் தாளில் காணப்படும் தொப்பி அணிந்த அம்மனிதர் ஒரு முஸ்லிம் உமர் லெப்பை பனிக்கார் என்ற இவர் கிழக்கு மாகானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரைச் சேர்ந்தவர்.

1925ல் ஏறாவூர் வனப்பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு யானையை இவர், கண்டி ஸ்ரீ தளதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அந்த யானை உமர் லெப்பை அவர்களைத் தேடி ஏறாவூர்வரை சென்றதாகவும் மீண்டும் அவர் அதனை எடுத்து வந்து தளதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

நாம் பயன்படுத்தும் 1000 ரூபாத் தாளில் காணப்படுகின்றது அத்தோடு யானையுடன் பக்கத்தில் இருப்பவரும் அவரே இந்த யானையை அவர் அவரது மகத்தான இச்சேவையை கௌரவிக்கும் விதத்தில் 1984ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி JR Jayewardene அவர்கள் அந்த யானையை தேசிய சொத்தாகப் பிரகடனம் செய்தார் அதற்கு Raja என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. 

அத்தோடு Umar Lebbe அவர்களை கொளரவிக்கும் விதமாக அரசால் அவரையும் அவரது யானையையும் சித்தரிக்கும் வண்ணம் அவர்களது புகைப்படம் ஆயிரம் ரூபாத் தாளில் அச்சிடப்பட்டது. குறித்த யானை 50 வருடங்களுக்கும் மேலாக தளதா மாலிகையில் இருந்து விட்டு 1988 July 15ம் திகதி இறந்துபோனது Umar Lebbe பனிக்கார் அவர்களும் மரணித்துவிட்டார்கள். 

அவர்கள் இறந்தாலும் அவர்களது வரலாறு இறந்துபோகா வண்ணம் 1000 ரூபாத் தாளில் அவர்களது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளமை மிகுந்த வரவேற்புக்குரியது.



முகநூலில் வந்தது


1 comment:

  1. பாராட்டப்ட வேண்டிய முன்மாதிகள்

    ReplyDelete

Powered by Blogger.