Header Ads



"முஸ்லிம்களுக்கு எதிரான பிரேணையை வலுவற்றதாக்க, வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது"

- Anzir -

முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்யக் கோரி, ரதன தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த தனியார் பிரேரணைக்கு எதிராக, முஸ்லிம் தரப்பினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யவிருந்த மனுவை தற்போதைக்கு தாக்கல் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் சட்டத்தரணிகளும் இணைந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

பாராளுமன்றம் இன்னும் 12 நாட்களே கூடவுள்ள நிலையிலும், அதற்காக ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு விட்ட நிலையிலும், ரதன தேரரின் பிரேணை எவ்விதத்திலும் விவாதிக்கப்படவே அல்லது வாக்களிப்புக்குச் செல்லவோ சாத்தியமில்லை என்பதாலும், உயர் நீதிமன்றத்தை நாடும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மகிந்த மற்றும் மற்றும் சபாநாயகர் கரு ஆகியோர், ரதன தேரரின் தனிநபர் பிரேணைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும், வழக்குத் தாக்கல் செய்வதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ள காரணமெனவும் கூறப்படுகிறது.

அதேவேளை ரதனதேரரின் பிரேணைக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்வதற்காக 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமது விபரம் முகவரிகளை அனுப்பியிருந்தனர். அவை பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம் சட்டத்தரணிகள் உறுதியளித்துள்ளனர்.

2 comments:

  1. 2 U N P MANDIRIĶÀLIN INDA PIRERANAIPATRI POLI MUSLIM THALAIVARKAL,, EN VAAI MOODI NITKIRAANUKAL.

    ReplyDelete
  2. இந்த காபிருக்கு எதிராக இந்த நாட்டு முஸ்லிம்களின் மனித உரிமையைக்கு எதிராக செயற்பட்டமைக்கு வழக்குத் தொடர இந்த சமூகத்தில் யாரும் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.