Header Ads



ஜனாதிபதி கோத்தாபயவுக்கு பாராளுமன்றத்திலும், பெரும்பான்மை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் - மைத்திரிபால

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. ஜனாதிபதிக்கு பெருமளவில் அதிகாரங்கள் காணப்பட்டாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையேல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தற்போதைய பாராளுமன்றத்தை மாற்றி புதியதொரு பாராளுமன்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. 

காரணம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். 

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் ஜனாதிபதிக்கு எவ்வாறான அதிகாரங்கள் இருந்தாலும் அவரால் முழுமையான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. 

ஜனாதிபதிக்கு வேண்டியளவு அதிகாரங்கள் காணப்படுகின்றன. எனவே அவர் நினைத்த நேரத்தில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சிலர் எண்ணுகின்றனர். அது தவறாகும். அவ்வாறு எண்ணுபவர்களின் தெளிவின்மையே அவ்வாறு சிந்திக்க வைக்கிறது. 

ஜனாதிபதி ஒருவருக்கு திட்டமிட்ட படி வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவருடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்திற்கு அத்தியாவசியமாகிறது. அவ்வாறில்லை என்றால் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. 

எனவே நாம் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கைகை மாற்றுவதற்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். அதற்கமைய ஒழுக்கமுடைய நாட்டை கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார். 

3 comments:

  1. Mr. My3....u dont have rights to tlak about this....cz you have cheated them in previous election after appam....

    ReplyDelete
  2. பொய்யை சொல்லி முஸ்லீம் வாக்குகளை அபகரித்து பதவிக்கு வந்த நீங்கள் உங்களது கட்சியில் முஸ்லீம் அமைச்சர் இருந்தனரே , அவர்களுக்கு ஒரு அமைச்சு பதவியை ஜனாதிபதியிடம் சொல்லி பெற்று கொடுக்க வில்லையே . , எம்மை விட ஜனாதிபதி நன்றாகவே
    உம்மை பற்றி புரிந்து வைத்துள்ளார் போலும் .

    ReplyDelete
  3. உங்களைப் பத்தி நல்லா அறிஞ்சிட்டம். கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் 'முன்னாள்' அவர்களே

    ReplyDelete

Powered by Blogger.