January 19, 2020

கருணாவுக்கு மனநிலை பாதிப்பா...? அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் “தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே” என கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக பதவி வகித்தார் என்பதை நான் அறிவேன். எனினும் கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை.

நான் அறிந்த காலப்பகுதியில் அவர் சுதந்திரக் கட்சியில் எந்த பதவிகளையும் வகிக்கவில்லை என்பதுடன் எந்த பணிகளிலும் ஈடுபடவில்லை.

கருணா அம்மான் அன்றைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு பிரபாகரனிடம் இருந்து தனது உயிரை மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாத்து கொண்டார் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகள் அமைப்பால் அவரது குடும்பத்திற்கும் பாரதூரமான ஆபத்துக்கள் ஏற்பட்டது.

இப்படியான நிலையில் தேசிய தலைவர் பிரபாகரன் மாத்திரமே என கருணா ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவருக்கு மனநிலை பாதிப்போ, வேறு ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என நான் நினைக்கின்றேன்.

தனது தேசிய தலைவர் பிரபாகரன் மாத்திரமே என அவர் கூறுகிறார் எனில் நாட்டின் சட்டம் ஏனையோருக்கு செயற்படுத்தும் விதமாக அவருக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

7 கருத்துரைகள்:

Vijayakala MP ku paintha sattam....intha idiot ku paayuma...illa pathunguma..???

தமிழ்மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காக பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் போடும் முகமூடி. இந்த விடயத்தில் சிங்களவர்களை தாஜாபண்ண வீரகுமார நாடகமாடுகின்றார். அரசியலை எண்ணும் போது தலை சுற்றுதையா.

சிங்கப்பூரை விட உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய எமது நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய இருவருள் ஒருவர் அவர் கூறும் அவரின் பாசிச தலைவர்.அடுத்தது அவர்.ஆனால் இப்போது ஏதோ மகாத்மா காந்தி போல் பேசினால் உலகம் இவரை நம்பி விடுமா? தன் இனத்தையே காட்டி கொடுத்து அழித்த இவரை தமிழ் மக்களே ஏரெடுத்தும் பார்ப்பதில்லை.ஒரு வேளை திரு.வீரகுமார அவர்கள் சொல்வது போல் மன வியாதியாக இருக்கலாம்.அரசாங்கம் விரைவில் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்க வேண்டும்.

சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல கால்களை நக்கி அரசியல் செய்ய வெளிக்கிட்டவன் தமிழர்களை போன்று சிங்களவர்களையும் முட்டாள்கள் என்று நினைத்து அரசியல் செய்ய பார்த்தான் ஆனால் சிங்களவர்கள் விழித்துக்கொண்டார்கள். இவனை நடு வீதியில் வைத்து நாயை சுடுவதை போல் சுட வேண்டும்.

எப்ப இருந்தும் இவருக்கொரு ஆப்பு ஆயத்தமாகவே உள்ளதென்பதை உலகமறியும், ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவராகவே சிக்குவாரென நாம் நினைக்கவில்லை.
மனவியாதி இவருக்கு பிடித்தது பத்து வருடத்திற்கு முன்பு.

மதிப்புக்குரிய Rizard. சிங்கபூரை ஒப்பிட வேண்டாம். அங்கு பெரும்பாண்மை சீனர்கள் ஆனால் அவர்கள் சிங்கள பெள்த்த இனவாதிகள்போல சிங்கபூர் சீன பெள்த்தர்களின் நாடு என பாசிச குரல் எழுப்பவில்லை. 3% குடித்தொலையை கொண்ட தமிழ் மொழியும் அங்கு உத்தியோகபூர்வ மொழி. இது பெள்த்தர்களின் நாடு என சொல்லும்வரை இலங்கை பர்மாவாக மாறலாம். அல்லது யூகோசிலேவியாவாக மாறலாம். இலங்கை சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தமிழரின் நாடு என்கிற உத்தியோகபூர்வ சூழல் ஏற்படாமல் இலங்கை ஒருபோதும் சிங்கபூராக மாறுவதற்க்கு வாய்ப்புகள் இல்லை.


Mr.Jeyabalan, you are correct sir. Singapore is developed simply because of unity among ethnic communities and no place for racism. Singaporean or Lee quan yu never claim they are superior people than others, although done remarkable performance.But only the Sinhala Buddhist claim they are superior people but did nothing.

Post a comment