Header Ads



உலகின் மிகவும் மோசமான கடவுச்சீட்டு - இலங்கை 97 ஆவது இடம்

2020ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அல்லது மோசமான கடவுச் சீட்டை தமதாகக் கொண்டுள்ள நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது Henley (Passport Index) என்ற சர்வதேச அமைப்பு.

சக்திவாய்ந்த கடவுச் சீட்டுக்களை தமதாகக் கொண்டுள்ள நாடுகளின் தரவரிசையில் ஜப்பான் முதலிடம் வகிக்கின்றது.

ஜப்பானின் கடவுச் சீட்டுக்களை வைத்திருப்போர் 191 நாடுகளுக்கு வீசா இல்லாமல் பயணம் செய்யமுடியும்.

சிங்கப்பூர் கடவுச்சீட்டு (190 நாடுகள்) இரண்டாம் இடத்திலும், தென் கொரியா மற்றும் ஜேர்மனி போன்ற கடவுச்சீட்டுக்கள்(189 நாடுகள்) மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஒஸ்ரியா போன்ற நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் ஏழாவது இடத்திலும், அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கிறிஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் 8வது இடத்திலும் இருக்கின்றன.

உலகின் மிகவும் மோசமான கடவுச்சீட்டை வைத்திருக்கும் நாடு வடகொரியா மற்றும் சூடான் என்று நிரல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் 39 நாடுகளுக்கு மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றன.

சிறிலங்கா கடவுச் சீட்டு 97வது இடத்திற்கு நிரல்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடவுச் சீட்டை வைத்திருப்போர் வெறும் 40 நாடுகளுக்கு மாத்திரமே வீசா அனுமதி இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

No comments

Powered by Blogger.