Header Ads



6 அடி நிலம்கூட இல்லை - இறந்த தொழிலாளர் உடல்களை வீதிக்கருகே அடக்கம் செய்யும் உச்சக்கட்ட பரிதாபம்


மலையக தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வீதியில் நல்லடக்கம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

 மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் இவ்வாரான ஒரு நிலை உருவாகியுள்ளது..

இந்த தோட்டத்தின் நல்லடக்கம் செய்யப்படும் இடம் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது. ஆரம்பக் காலத்தில் இவை முறையாகக் காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.  

இதனால் பெரும்பாலான கல்லறைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டுள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்குத் தோட்ட மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.

இதனைப் பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இழுத்தடிப்புக்களை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகிக் கொண்டிருக்கும் பெருந்தோட்ட  தொழிலாளர்கள் இறந்தும் நல்லடக்கம் செய்வதற்குக் கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குரிய விடயமாகும். 

இதை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் குறித்த தோட்டமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


1 comment:

  1. எங்கே? அந்த வாய் கிழிய பேசுகிற வீணா போன தமிழ் மலையக எருமைகள்.. எங்கே அந்த டுபாக்கூர் மனோ தோட்ட காட்டன் என்று சொன்னதுட்கு டிவி ல பெருசா சீன் போட்டான் ஒருதனாலயும் ஒரு ம***யம் புடுங்க முடியாது சும்மா சும்மா என் மக்கள் நாங்கள் அவர்கள் தலைமைகள் என்று வீர வசனம் பேசத்தான் லாயக்கு வெட்கம் கெட்டவன். மலையக மக்களே உங்கள் எல்லாம் தேவைகளும் நிறைவேறாத வரை ஒரு நாய்க்கும் அடுத்த தேர்தலில் வாக்களிக்காதீர்கள் நீங்கள் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு

    ReplyDelete

Powered by Blogger.