Header Ads



52 வழக்குகளை எதிர்கொண்டுள்ள பசறை, பஸ் விபத்தின் சாரதி

(எம்.எப்.எம்.பஸீர்)

பதுளை, பசறை – மடுல்­சீமை பிர­தான வீதியின் ஆறாம் கட்­டைப்­ப­கு­தியில் ஒன்­பது பேரின் உயிரைப் பறித்து மேலும் 40 பேருக்கு காய­மேற்­ப­டுத்­திய சம்­ப­வத்தில், இலங்கை போக்­கு­வ­ரத்து சபை பஸ் வண்­டியின் சார­திக்கு எதி­ராக 52 வழக்­கு­களை தாக்கல் செய்ய  நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் உரிய ஆலோ­ச­னைகள் மடுல்­சீமை பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பதுளை  பொலிஸ் அத்­தி­யட்சர் வசந்த கந்­தே­வத்த தெரி­வித்தார்.

இந்த விபத்து தொடர்பில் குறித்த பஸ் வண்­டியை செலுத்­திய  சார­தி­யான  விஜே­சிங்க முதி­யன்­ச­லாகே சாந்தகுமார என்­பவர் ஏற்­க­னவே மடுல்­சீமை பொலி­ஸாரால் கைது  செய்­யப்­பட்டு எதிர்­வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக 52 வழக்­கு­களை தாக்கல் செய்ய பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.

 இத­னை­விட, குறித்த பஸ் வண்டி விபத்­துக்கு உள்­ளாகும்போது, அந்த பஸ் வண்­டியின் வரு­மான அனு­மதிப் பத்­திரம் இருக்­க­வில்லை எனவும் அது தொடர்பில் பதுளை  இலங்கை போக்­கு­வ­ரத்து சபை டிப்போ அத்­தி­யட்­ச­ருக்கு எதி­ராக வழக்கு தொட­ரவும் பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இந்த வழக்­கு­களில் பாது­காப்­பற்ற வாகன செலுத்தல்,  விபத்­தொன்­றினை தடுக்­காமை,  உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யமை, படுகாயங்­களை விளை­வித்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­த­ப்ப­ட­வுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி கூறினார்.

இதற்­கான ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரச சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளை மையப்படுத்தி குறித்த வழக்குகள் தாக் கல் செய்யப்படவுள்ளன., 

No comments

Powered by Blogger.