Header Ads



ஈரானில் 52 இடங்களை, குறிவைத்துள்ளதாக டிரம்ப் எச்சரிக்கை

இரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை இரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர்தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்த டிரம்ப், "பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக இரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். நாங்கள் 52 இரானிய இலக்குகளைக் குறி வைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

1979ஆம் ஆண்டு இறுதியில் 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக இரானில் ஓர் ஆண்டுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டப் பின் இந்த சம்பவமானது நடந்தது.

இதனைக் குறிக்கும் விதமாகதான் டிரம்ப் இவ்வாறு கூறி உள்ளார்.

1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரானில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். அன்றிலிருந்து இருநாடுகளும் எதிரிகளாக இருந்து வருகின்றன.

3 comments:

  1. Thanks Mr. Donald.
    We always with you against terrorised state of Iran

    ReplyDelete
  2. Divert Political

    இஸ்ரேலுக்கு (Child Killer) எதிராக சர்வதேச விசாரனண வேண்டுமென்ற கோசம் எழும்புகின்ற போதல்லாம் உலகில் வேறு நிகழ்வுகள் மூலம் அது திசை திருப்பப்படுகின்றது.

    * இந்தியாவில் CAA, NRC
    * ஈராக்கில் அமெரிக்காவின் தாக்குதல்
    * ஈரான் - அமெரிக்க நாடகம்
    * லிபியாவில் தாக்குதல்போரட்டம்
    * மியன்மாருக்கு எதிரான விசாரனை

    ...............

    ReplyDelete
  3. தம்பி அனுஷ்.. முஸ்லிம்கள் யாரும் ஈரானை ஆதரிக்க போவதில்லை உலகறிவில்லாத தமிழ் பயங்கரவாதிகள் ஆத்திரப்பட்டு சந்தோசப்பட்டு இறுதியில் அம்மணமாக நின்று விட வேண்டாம் முள்ளிவாய்க்காலில் நின்றதுபோல்

    ReplyDelete

Powered by Blogger.