Header Ads



ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட 50 பில்லியன் பேரல் எண்ணெய் கிணறே, அமெரிக்க தாக்குதலுக்கு காரணமா..?

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்கா கொன்று அந்நாட்டினை தாக்குவதற்கு 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக உலகில் இருக்கும் ஏதேனும் ஒரு நாட்டில் கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அமெரிக்கா அந்நாட்டை தன்னுடைய நட்பு நாடாக அறிவிக்கும், இல்லையென்றால் அந்நாட்டிற்கு எதிராக போர் தொடுத்து அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.

இதன் காரணமாகவே தான் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவின் எதிர்ப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கூட அமெரிக்கா திடீரென்று இப்படி ஒரு தாக்குதல் நடத்துவதற்கு காரணம் கச்சா எண்ணெய் கிணறு ஈரானில் சமீபத்தி கண்டுபிடிக்கப்பட்டது என்று தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோர்பர் மாதம் இறுதியில் ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.

நாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவு, இதில் விரைவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஏனெனில், ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பதால், ஏற்கனவே ஈரான் மீது மூன்று பொருளாதார தடைகளை விதித்திருந்த அமெரிக்காவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது ஈரானின் இந்த அறிவிப்பால் ஈரானின் மதிப்பு உலக அளவில் உயரும்.

இதனால் ஈரானிடம் மீண்டும் எண்ணெய் வாங்க சில நாடுகள் முயற்சி செய்யும், தங்கள் முடிவை சீனா உள்ளிட்ட நாடுகள் மறுபரிசீலனை செய்யும். இதை தடுக்கவே அமெரிக்கா இப்படி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், அமெரிக்கா தாக்குதலுக்கு பல காரணங்களை கூறினாலும், இது தான் ஒரு முக்கிய காரணம்,

ஈரான் மீண்டும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அந்த எண்ணெய் கிணறுகளை கைப்பற்றாவும் இப்படி ஒரு தாக்குதலை டிரம்ப் நடத்தியிருக்கலாம் என்றும் அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது, இதற்காக ராஜந்திர விளையாட்டை நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.