Header Ads



சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்

பேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில்   இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செய்யும் ( Security guard)  மூன்று இலங்கையர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நேற்று   விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தலா ஒவ்வொருவருக்கும் 500,000 AED திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் இஸ்லாமிய மதத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்துக்களை முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் வௌியிட்டதாக அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

துபாய் ஹோட்டல் தொகுதியொன்றின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய இந்த மூன்று பேர் தொடர்பில் குறித்த ஹோட்டல் ஊழியர்களினால் பொலிஸில முறைப்பாடு செய்யட்டது.

அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கையடக்கத் தொலைபேசி, லெப்டொப் ஆகியவற்றை விசாரணைக்காக பொலிஸார் எடுத்துச் சென்றனர்.

இஸ்லாமிய மதத்தை அவதூறு செய்ததாக சாட்டப்பட்ட குற்றத்தை குறித்த மூன்று இலங்கையர்களும் நீதிமன்றத்தில் நிராகரித்தனர். இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல்களின் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வௌியிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்  அவர்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு நேற்று  துபாய் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 5 இலட்சம்  AED இலங்கை மதிப்பில் ஒருவருக்கு சுமார் இரண்டரை கோடி அபரதாத்தை செலுத்திய பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவார்கள் எனவும் அத்தீர்ப்பில் மேலும் தெரிவிக்கபடுகிறது.


2 comments:

Powered by Blogger.