Header Ads



ராஜித்த மீது மேலும் 2 குற்றச்சாட்டுக்கள்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார். 

இந்த நிலையில் அந்த பிணை உத்தரவிற்கமைய சட்டமா அதிபர் மீள்பரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமை சட்ட விரோதமானது என சட்டமா அதிபர் தனது மீள்பரிசீலனை மனுவில் தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித்த சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன பிணை வழங்கி உத்தரவிட்டார். 

எனவே ராஜித்த சேனாரத்னவுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரியே சட்டமா அதிபர் இந்த மீள்பரிசீலனை மனுவை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரி சட்டத்தரணி நிஸாரா ஜயரத்ன தெரிவித்தார். 

அத்துடன் இந்த மீள்பரிசீலனை மனுவை விசாரித்து நிறைவடையும் வரை ராஜித்த சேனாரத்னவை கைது செய்து தடுத்து வைக்குமாறு சட்டமா அதிபர் தனது மீள்பரிசீலனை மனுவின் மூலம் கோரியுள்ளார். 

இதேவேளை ராஜித்த சேனாரத்னவின் இரண்டாவது மகன் எக்சத் சேனாரத்ன தனது மகளை பலவந்தமாக கடத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் சட்ட ரீதியான விசாரணைகளுக்கு ராஜித்த சேனாரத்ன அச்சுறுத்தல் விடுத்தாக குறித்த யுவதியின் தந்தை காமினி ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். 

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நோயாளியை பார்வையிட சென்ற போதே இந்த விடயம் தெரியவந்தாக அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

எனினும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

எனினும் அவர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.