Header Ads



2 நாட்களுக்குள் ஈரான் தாக்குதலை தொடுக்கலாம் - எச்சரிக்கையாக இருக்க அமெரிக்க அறிவுரை


தங்களின் கப்பல்கள் மீது ஈரானிய கப்பல்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதை அடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சில முக்கிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எந்த நேரத்தில் என்ன ஆகும் என பலரும் நினைக்கும் சூழலே நிலவி வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்கா தற்போது விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், மத்திய கிழக்கு நாடுகள் வழியாக செல்லும் தங்களின் கப்பல்கள் ஈரான் கப்பல்கள் மூலம் தாக்கப்படலாம், அதனால் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுகொண்டுள்ளது.

2

குவாசிம் சுலைமானியின் மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக ஈரான் இன்னும் இரண்டு நாட்களில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தலாம் என்று அமெரிக்க இராணுவம் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தளபதி குவாசிம் கொலைக்கு பின் அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானின் முக்கிய தளபதியான குவாசிம் கொலை செய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆகிவிட்டதால், ஈரான் நிச்சயமாக தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க இராணுவம் நம்புவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் நிச்சயமாக பழிக்கு பழி வாங்குவதில் தீர்க்கமாக இருக்கும் என்று அமெரிக்க இராணுவம் அஞ்சுவதாகவும், குவாசிம் சுலைமானின் மரணத்திற்கு ஈரான் ஒரு அமெரிக்க இராணுவத் தளபதியை குறி வைக்கலாம் என்று நம்பப்படுவதாகவும், அது இன்னும் இரண்டு நாட்களில் மிகப் பெரிய தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுவதால், அதற்கு எந்த ஒரு வகையிலும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்க கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் குவாசிம் சுலைமானியின் இந்த மரணத்தின் துக்க காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் போன்ற வை ஏற்பட்டு வருவதால், இது ஈரானின் இறுதி போக்கை தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் நம்புவதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் இந்த மிகப் பெரிய தாக்குதலுக்கு பின் இரான் இராணுவத்தின் நகர்வுகள் எப்படி இருக்கின்றன? தாக்குதலுக்காக ஈரான் தயாராகி வருகின்றதா? என்பது குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தெளிவான தகவல்கள் கிடைக்காவிட்டாலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஏதேனும் ஒரு பெரிய தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் தன்னுடைய இராணுவ படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.