January 16, 2020

மூதூர் ஷாபி நகரை நோக்கி உலகத்தை திரும்பிக்பார்க்க வைத்த 2 பெண் பிள்ளைகள்

- M.Y.Irfhan -

நேற்றுக்காலை -15- விடிந்தது மப்பும் மந்தாரமான இதமான குளிரான  கால நிலை பொங்கல்  தினமென்பதால் விடுமுறை நாள் காலை எட்டு முப்பது மணியளவில் நண்பருடன் மோட்டார்  சைக்கிளில் பயணம் ஆரம்பித்தது

ஒன்பது முப்பது மணியளவில் காத்தான்குடியை அடைந்தோம் அங்கு சில வேலைகள்  நிமிர்த்தம்  இரண்டு மணி நேரம் தரித்து விட்டு ஒரு நீண்ட பயணத்திற்கு தயாராகிறோம்

மோட்டார்  சைக்கிள் மட்டக்களப்பு, ஏறாவூர் வாழைச்சேனை ஊர்களை தாண்டி செல்கிறது

விடுமுறை தினமென்பதால் வீதியில் வாகனங்கள்  மிகக் குறைந்து  காணப்பட்டதால் விரைவாக ஒட்டமாவடியை  அடைந்தோம்

பின்னர் மோட்டார்  சைக்கிள் வாகரை பக்கமாக திருப்பி  பயணிக்கிறோம்   ஒருவாறு  வாகரை, வெருகல் , கிளிவெட்டி தாண்டி சேருநுவரவில்  வண்டியை நிறுத்தி வீதியோர பொட்டிக்கடையில் இளநீர் அருந்தி
விட்டு சில நிமிடங்கள் கழித்து  பயணம் தொடர்கிறது

ஒருவாறு தோப்பூரை அடைகிறோம்  பிரதான வீதியோரமாக அமைத்திருப்பது பாலத்தோப்பூர்  உள் புறமாக இரண்டு கிலோ மீற்றர் பயணித்து தோப்பூரை சுற்றிப் பார்த்து விட்டு பயணம் தொடர்கிறது

பனிரெண்டு  கிலோ மீற்றர் பயணித்து  நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து பயணித்த இலக்கான மூதூரை மதியம் ஒன்றரை மணியலவில் அடைகின்றோம்

மகிழ்ச்சியாக இருந்து ஏனனில் மூதூருக்கு வருவது இதுதான் முதற் தடை பெரிய பாலத்தடி பள்ளிவாயலில் தொழுது விட்டு வெளியே வந்த போது பசி வயிற்றை கிள்ள  தொடங்கியது  பின்னர் பிரதான வீதியிலுள்ள ஒரு உணவகத்தில் வயிறாற பசியாறினோம்   அல்ஹம்துலில்லஹ்

ஹோட்டல் உரிமையாளரிடம் ரிசானா மற்றும் முசாதிக்கா இருவரின் வீட்டுக்கு செல்லும் வழியை கேட்டறிந்து  கொண்டோம்

ஷாபி நகரை நோக்கி பயணமாகிறது வண்டி...

ரிசானா மரண தண்டனைக்கு உள்ளான  போது அன்னாரின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என  அப்போது நினைத்திருந்தேன்  ஆனாலும்  அது அப்போது கை கூட  வில்லை ஏழு  வருடங்களின் பின்னர்தான் அது சாத்தியமாகியிருகின்றது

ரிசானாவின்  குடும்பத்துக்காக இராணுவத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட  புதிய  வீட்டுக்கு சென்று பரீதாவை  சந்தித்து உரையாடினோம்

மிகவும் பாசமாக கதைத்தார் சிற்றுண்டியும் தேநீரும் வழங்கி  அன்பாக உபசரித்தார்

பின்னர் ரிசானாவின் தந்தையை பழைய  வீட்டுக்கு சென்று தந்தையை சந்தித்து கதைத்தோம்

கடந்த 9 ஆம் திகதி ரிசானா மரணித்து ஏழு  வருடங்கள் முடிந்து விட்டதாக கூறினார். மூத்த மகள்  படித்து  விட்டு  வீட்டில் இருக்கின்றார் மற்ற  மகள் புத்தளத்தில் இரண்டு ஆண்டுகளாக ஓதிக் கொண்டிருப்பதாகவும் மகன் வேலை செய்து கொண்டிருப்பதாகவும்  வாழக்கை ஒருவாறு நகர்ந்து  கொண்டிருக்கின்றது என விபரித்தார் 

ரிசானாவின் வீட்டிலிருந்து விடைபெற்று  குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் கற்கப் போகும்   முசாதிகாவின் வீட்டை  நோக்கி பயணம் தொடர்கிறது...

முதலில் றிசானாவும் முசாதிகாவும் கல்வி கற்ற இமாம்  ஷாபி வித்தியாலயத்தை  பார்வையிட்டோம் 

மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியில் நூறு மீற்றர் உட்புறமாக அமைந்திருக்கின்றது முசாதிகாவின்
வீடு

வீட்டின்  முற்புறமாக வந்து  அழைத்த  போது
முசாதிகாவின் தந்தையை வெளியே வந்து  வீட்டிற்குள்
வருமாறு அழைத்தார்

நம்ப முடியாமல் இருந்தது அவ்வளவு சிறிய குடிசை வீடு  முசாதிகாவின் தந்தை தாய் இருவரிடமும்  பேசினோம் 
முசாதிகாவின் வீட்டை  பார்த்த போது அப்படியாக வீடுகள் பிரதேசத்தில் எங்கேயுமில்லை

அனுமதி  கேட்டு குடிசைக்குள் நுளைந்தேன் ஒரு சமையலறையும்   இன்னுமொரு அறையுமே
மொத்தமான  வீடு

மர நிழலே அவர்களின் வரவேற்பறை
மிகவும் நெருடலாக இருந்தது முசாதிகாவின் தந்தை ஒரு கூலித் தொழிலாளியல்ல சொந்தமாக செங்கல்  உற்பத்தியில் ஈடுபடுகிறார்

முசாதிகாவின் குடும்பம்   குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோசமாக வாழ்கிறார்கள்  என்பதுதான் நிஜம்

முசாதிகாவின் தந்தையும் தாயும் மிக சரளமாக உரையாடியாது  பெரு மகிழ்ச்சியை தந்தது

முசாதிகாவின் பெருங்  கனவு நிறைவேறி வைத்திய துறைக்கு நுழைந்திருக்கின்றார்

மகப்பேற்று மருத்துவராக  வர வேண்டுமென்ற கனவும்    நிறைவேற வாழ்த்தி பிரார்த்தித்து விடை பெற்றோம்

4 கருத்துரைகள்:

தேடலுள்ள மிக நல்ல பதிவு.

Her career goal to become a Gynaecologist is a risky one. There is no guarantee that she won’t be accused of malpractice as Athulariya thero and company are doing for Dr. Shafi right now.

She does not necessarily confined to her country of own once she gained her aspiration, unfortunately no qualified minority personnel have options are open in this country.All thieves and goons have already spoiled in this country and the governing bodies too like this way in order to strengthen their seats and positions forever.

Post a Comment