Header Ads



ரஞ்சனின் ஒரு இலட்சத்து 21.000 குரல் பதிவுகள் உள்ளன - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை, அதிகாரிகளை மிரட்டி அரசியல் -பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குரல் பதிவுகளில் 5  குரல்பதிவுகள் மட்டுமே வெளியில் வந்துள்ளது. இன்னும் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல்பதிவுகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார். 

அத்துடன் அதனை வெளியிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் சகல குற்றங்களும் வெளியில் வரும். எமது ஆட்சியாளர்களை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்பு, சட்ட மீறல்கள் முன்னெடுத்ததாக மக்கள் மத்தியில் கூறியவர்களின் உண்மை முகம் இப்போது வெளியில் வந்துள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயகவும் சேர்ந்து செய்த சதிகள் வெளியில் வந்துள்ளது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலித ரங்கே பண்டார :- குற்றப்புலனாய்வு பிரிவிடம் இருந்த குரல் பதிவுகள் எவ்வாறு உங்களில் கைகளுக்கு வந்தது? நீங்கள் இவற்றை எவ்வாறு எடுத்தீர்கள். அப்படியென்றால் இது சட்டத்தை கையில் எடுத்த செயற்பாடு இல்லையா என கேள்வி எழுப்பினார். 

எனினும் இந்த கேள்விக்கு எந்தவித பதிலும் கூறாது இராஜாங்க  அமைச்சர் உரையை முடித்தார். 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

No comments

Powered by Blogger.