Header Ads



ஷியாக்களின் கண்கண்ட கடவுள் குவாசிம், 20 வருடங்களாக தேடப்பட்டவர்


தென்கிழக்கு ஈரானில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து பின்னாளில் அமெரிக்க வல்லரசை நடுங்க வைத்த தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில், அவரது அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் குவாசிம் சுலைமானி.

13-வது வயதில் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றத் தொடங்கினார் குவாசிம்.

பின்னர் ஈரானின் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார்.

1979 காலகட்டத்தில் ஈரானிய புரட்சியின்போது இளைஞரான சுலைமானி ராணுவத்தில் இணைந்தார். வெறும் ஆறு வாரங்கள் மட்டுமே பயிற்சி நேடிய குவாசிம், உடனடியாக ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் போருக்கு களமிறங்கினார்.

ஈரான் - ஈராக் போரில், ஈராக்கில் எல்லையில் குவாசிம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அவரை ஒரு நாயகனாக உயர்த்தியது.

இந்த காலகட்டத்தில் குவாசிம் ஈரானின் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் என்ற பேச்சும் உலா வந்தது.

ஈரானின் மத்திய கிழக்கில் உள்ள ஷியா மக்கள் தளபதி குவாசிமை கண்கண்ட கடவுளாகவே பவித்து வந்தனர்.

ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு குவாசிம் என்றால் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்ற, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளை கவிழ்க்கின்ற, ஈரான் ரகசியமாக வெளிநாடுகளில் முன்னெடுக்கும் போர்களுக்கு பின்னால் இயங்கும் சக்தி என அமெரிக்காவே வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

1998 முதல் ஈரானின் குத்ஸ் படைக்கு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட குவாசிமை அமெரிக்கா பயங்கரவாதி என அறிவித்ததுடன், அவருடன் தொழில் ரீதியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவும் தடை விதித்தது.

1980 காலகட்டத்தில் ஈரான் - ஈராக் போரின் போது முன்னிலை வகித்த குவாசிம், பின்னர் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு எதிராக ஷியா மற்றும் குர்து படைகளை திரட்டி, அவர்களுக்கு போர் பயிற்சியும் அளித்துள்ளார்.

மட்டுமின்றி 2014-15 காலகட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஈராக் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மன்றம் தடை விதித்த முக்கிய ஈரானிய பிரஜைகளில் குவாசிமும் ஒருவர்.

2011 ஆம் ஆண்டு மீண்டும் ஐ.நா. மன்றம் தடை விதித்ததுடன், உலகில் எந்த நாடுகளுக்கும் குவாசிம் செல்ல முடியாதபடி பயணத் தடையும் விதித்தது.

கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேலிய மற்றும் அரபு அமைப்புகளால் பலமுறை குவாசிம் குறிவைக்கப்பட்டு, உயிர் தப்பியுள்ளார்.

தற்போது பாக்தாத் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க விமானப் படையால் ஏவுகணை மூலம் தாக்கி கொல்லப்பட்டுள்ளார் குவாசிம்.

தளபதி குவாசிமின் இந்த இழப்புக்கு ஈரான் பதிலடி அளிக்கும் என்றே அரசியல் மற்றும் போர் தொடர்பிலான நிபுணர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. Gen Qassim Soleimani is a Global thinker of Defence 2019

    M.Uwais

    ReplyDelete

Powered by Blogger.