Header Ads



20 என்று எழுத வேண்டாம் - முழுமையாக 2020 என்று எழுதவும்


இந்த ஆண்டில் ஆவணங்களில் கையெழுத்திடுவோர் திகதியைக் குறிப்பிடும்போது கவனமாக இருக்கும்படி பிரான்ஸ் பொருளாதார இணையதளம் ஒன்று எச்சரித்துள்ளது.

அதாவது, பிரான்சில் ஆவணங்களில் கையெழுத்திடுவோர், திகதியிடும்போது, 12/03/20 என்பது போல் திகதியிடுவதுண்டு.

ஆனால், இதில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. நேர்மையற்ற நிறுவனங்கள், நில மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போன்றவர்கள், ஆவணங்களில் திகதியை எளிதாக மாற்றிவிட முடியும்.

உதாரணமாக, ஒருவர் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டு 12/03/20 என்று திகதியிடுவார் என்று வைத்துக்கொள்வோம்.

அதில் ஒருவர் 06 என்று சேர்த்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம், அது 12/03/2006 என்றுஆகிவிடும். அதேபோல் 25 என்று சேர்த்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம், அது 12/03/2025 என்று ஆகிவிடும்.

எனவே மிக எளிதாக நம்மை மற்றவர்கள் ஏமாற்றிவிட முடியும்.

அதிர்ஷ்டவசமாக, சட்ட ஆவணங்கள் இந்த பிரச்சனையில் சிக்காது, காரணம், 1971 நவம்பர் 26 அன்று இயற்றப்பட்ட ஒரு சட்டம், ஆண்டுகளைக் குறிப்பிடும்போது முழுமையாக எழுதுவதோடு, எழுத்திலும் குறிப்பிடவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

ஆகவே, பிற ஆவணங்களில் திகதியைக் குறிப்பிடும்போது, பிரச்சனைகளைத் தவிர்க்க, 20 என்று ஆண்டைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, எழுத்தில் குறிப்பிடலாம், அல்லது முழுமையாக 2020 என்று குறிப்பிடலாம்.

இதை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையக இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.