Header Ads



அஸாத் சாலியிடம் 2 தடவை CID விசாரணை - ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வும் மேலதிக விசாரணைக்கு அழைப்பு

மாவ­னல்லை புத்தர் சிலை உடைப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் சந்­தேக நபர்­களை பொலிஸில் கைய­ளிக்க தவ­றி­யமை சம்­பந்­த­மாக வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தற்­காக எதிர்­வரும் 8ஆம் திகதி ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு வரு­மாறு தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், மாவ­னல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலையை சேதப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்தும் அதனை செய்­யத்­த­வ­றி­யமை தொடர்­பாக வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு எதிர்­வரும் 8 ஆம் திகதி வரு­மாறு அழைப்பு வந்­தி­ருக்­கின்­றது. அன்­றைய தினம் நிச்­ச­ய­மாக அங்­கு­சென்று வாக்­கு­மூலம் வழங்கத் தயா­ராக இருக்­கின்றேன். உண்­மையை தெரி­விக்க நான் ஒரு­போதும் அச்­சப்­பட்­ட­தில்லை.

அத்­துடன் தேரர் ஒருவர் எனக்­கெ­தி­ராக பொலிஸில் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மைய கடந்­த­வாரம் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் இரண்டு தினங்கள் என்­னிடம் விசா­ரணை மேற்­கொண்­டி­ருந்­தனர். குறிப்­பாக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்­த­வேளை விகடன் சஞ்­சி­கைக்கு நான் அளித்த பேட்டி தொடர்­பா­கவும் நான் மேல் மாகாண ஆளு­ந­ராக இருந்­த­போது புவக்­பிட்டி தமிழ் பாட­சாலை ஆசி­ரி­யர்கள் 16 பேருக்கு இட­மாற்றம் வழங்­கி­யமை, ஏப்ரல் தாக்­குதல் சம்­ப­வத்­துக்கு பின்னர் முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களை இரா­ணு­வத்­தினர் மோப்ப நாய்­க­ளைக்­கொண்டு சோதனை நடத்­தி­ய­போது அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தமை, டாக்டர் ஷாபி விவ­கா­ர­மாக விசா­ரணை மேற்­கொண்­டு­வந்த குரு­ணாகல் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் வழக்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வந்த நீதி­பதி தொடர்­பாக தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்­தினர்.

பொலிஸில் யாரா­வது முறைப்­பாடு ஒன்றை தெரி­வித்தால் அது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வது சாதா­ரண விட­ய­மாகும். பொலிஸார் அதனை மேற்­கொள்ள வேண்டும். அத்­துடன் தேரர்கள் முறைப்­பாடு செய்­த­துடன் அது தொடர்பில் உட­ன­டி­யாக பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்­றனர். ஆனால் நாங்கள் சில தேரர்­க­ளுக்கு எதி­ராக பல முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருக்­கின்றோம். இது­வரை எத­னையும் பொலிஸார் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ள­வில்லை.

மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் தேரர் ஒருவர் சட்­டத்தை கையில் எடுத்­துக்­கொண்டு செயற்­பட்டு வரு­வதை சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக காண்­கின்றோம். பொலி­ஸா­ருக்கு முன்­னி­லை­யிலே அருட்­தந்தை ஒரு­வரை மிகவும் மோச­மான முறையில் திட்­டு­கின்றார். ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேபோன்று ஒரு பொது மகன் மீது கன்னத்தில் அறைவதை பார்க்கின்றோம். இந்த தேரருக்கு எதிராக இதற்கு முன்னரும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றார்.-

எம்.ஆர்.எம்.வஸீம்

No comments

Powered by Blogger.