Header Ads



மத்­ர­ஸாக்களை ஏன் மீண்டும் பதிகிறீர்கள்? 19 முஸ்லிம் Mp க்கள் இருக்கையில் மகிந்த தனித்து செயற்­ப­ட கூடாது

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். குறித்த பதி­வு­க­ளுக்கு இரா­ணு­வத்தைப் பயன்­ப­டுத்­து­வ­த­னூ­டாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்­டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருக்­கின்ற நிலையில் பிர­தமர் தனித்து சுயா­தீ­ன­மாக செயற்­ப­டாது மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் பேச்சு நடத்தி ஆலோ­சனை பெற்று செயற்­பட வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்­துள்ளார். அத்­துடன், 2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்ட பின்னர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராகப் பத­வி­வ­கித்த ஹலீமின் முகா­மைத்­து­வத்தின் கீழ் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான குர்ஆன் மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்­லூ­ரி­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், புதி­தாக மீண்டும் பதிவு நட­வ­டிக்­கை­களை ஏன் மேற்­கொள்ள வேண்­டு­மென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இது ­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்­டி­லுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்­லூ­ரி­களும் கலா­சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த 2015 க்கு முன்னர் மத்­ர­ஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலா­சா­லை­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் தடைப்­பட்­டி­ருந்­தன. அல்­லது நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் குறிப்­பி­டலாம். எனினும், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்னாள் அமைச்சர் ஹலீமின் முயற்­சி­யினால் பெரும்­பா­லான மத்­ர­ஸாக்­களின் பதி­வுகள் இடம்­பெற்­றன. இருந்­த­போ­திலும் இன்னும் பதி­வு­செய்­யப்­ப­டாத மத்­ர­ஸாக்கள் இருப்பின் அவற்றை பதி­வு­செய்து கொள்­வ­தற்­கான கால அவ­கா­சத்தை அர­சாங்­கத்தால் வழங்க முடியும். இதனை தவிர்த்து அனைத்து மத்­ர­ஸாக்கள் மற்றும் அரபுக் கல்­லூ­ரி­க­ளையும் மீண்டும் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­பது வீணான கால விர­யத்­தையே ஏற்­ப­டுத்தும். அத்­தோடு, அர­சுக்கு மேலும் செல­வீ­னத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அமையும். எனவே, கடந்­த­காலப் பதி­வு­களை பேணு­வது சிறப்­பா­ன­தாக அமையும்.

இது­த­விர, தற்­போது மத்­ர­ஸாக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பாக இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது முஸ்விம் மக்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். மத்­ரஸா பதிவு நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் ஊடாக கலா­சார அமைச்­சி­னா­லேயே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதை தவிர்த்து இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்­து­வது பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

அத்­துடன், மத்­ர­ஸாக்கள் மறு­சீ­ர­மைப்பு அல்­லது ஒழுங்­கு­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் செய்­வ­தாயின் அதனை பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அவர்­களின் ஆலோ­ச­னைக்­க­மைய முன்­னெ­டுக்­கலாம். எனினும், தனித்து செயற்­ப­டு­வது ஏற்­பு­டை­ய­தல்ல. இதேவேளை, ஒருசில முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் மாத்திரம் பேசி அரசாங்கத்தின் இரகசிய திட்டங்களை முன்னெடுப்பதானது ஆபத்தானதாகும். மத்­ரஸா பதிவு நட­வ­டிக்­கை­களும் ஒழுங்­கு­ப­டுத்தல் திட்­டங்­களும் வெளிப்­ப­டை­யா­ன­தாக இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை மறைமுகத் திட்டங்களினூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் நசுக்க முற்படவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். 

-Vidivelli

No comments

Powered by Blogger.