Header Ads



125 வருட பழைமையான பள்ளிவாசல் காணியில், புத்தர்சிலை வைத்தவர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

நெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வரக்காப்பொல மஜிஸ்திரேட் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சனி இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள காணி பள்ளிவாசலுக்கு உரியதா? வீதி அதிகார சபைக்கு உரியதா? என்பதில் சிக்கல் இருக்கிறது. அதனாலேயே நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து உடுகும்புற பள்ளிவாசல் நிர்வாகிகள், விகாரை நிர்வாகிகள், பிரதேச செயலாளர்கள், RDA, புத்தசாசன அமைச்சின் பிரதிநிதி உட்பட பலருக்கு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொலிஸ் அதிகாரி அபேரத்ன தெரிவித்தார்.

சனிக்கிழமை முதல் சிலைக்கும் பள்ளிவாசலுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கும் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் கொழும்பு மேயரும், முன்னாள் ஈரான் தூதுவருமான ஒமர் காமில் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

125 வருடங்கள் பழைமையான உடுகும்புற பள்ளிவாசல் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்குமாறு முஸ்லிம் கவுன்சில் ஆளும் கட்சியின் முஸ்லிம் முக்கியஸ்தர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கேகாலை மாவட்டம், தெடிகம தேர்தல் தொகுதியில் உள்ள உடுகும்புறவில் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் அளவிலேயே வசிக்கின்றனர்.

விடிவெள்ளி

4 comments:

  1. sometimes lord buddha decided to stay there & protect the masjid from some people who miss followed him and claims themselves as the original Buddhists.

    ReplyDelete
  2. Buddha preach some think, his followers use planting Buddha statue in some one else's property, and this disgraceful act is happening in so called Buddhist country. What we Muslim has to take away from this. By any means for personal gains never use Islam.

    ReplyDelete
  3. This buddhl

    The matter of putting up buddah statue near the mosque by anti social compilation elements is attempt to dilapidate peaceful relationship among communitie.on the complaints made by affected side police has taken taken appropriate action and now it's decision is up to court


    ReplyDelete
  4. பெளத்த தத்துவத்தை நம்புவோர்க்கு
    வெற்றிடமாகவுள்ள முழு வாழ்வியலான -
    பூரண வாழ்க்கைத் திட்டம் இஸ்லாத்தை,
    அவர்களின் அமைவிடங்களிலேயே 
    அமர்ந்துகொண்டு, அவர்களுக்குப்
    புரியாத பாஷையில் எரிச்சல் ஊட்டியும்
    தனியாகவும் அரங்கேற்றியாதற்கான
    வெறுப்பின் விளைவும் காரணமாகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.