Header Ads



புத்தளத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க SLMC, ACMC கூட்டிணைவு சம்பந்தமாக பேச்சு


எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று (23) புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம்,கட்சியின் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் இரு கட்சியினதும் புத்தள மாவட்ட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை தலைவருமான கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம்,கட்சியின் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் இரு கட்சியினதும் புத்தள மாவட்ட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



1 comment:

  1. தற்போதைய அரசியல் முன்னெடுப்புகளில் திட்டமிட்டு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கால முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க வேண்டுமானால் புத்தளத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இருக்குற கொஞ்ச வாக்குகளையும் அங்கும் இங்குமாக பிரித்து அளித்தால் கடைசியில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் MP களை காணவே கிடைக்காது. - மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.