Header Ads



அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லாமைக்கு, முஸ்லிம் கட்சிகள் சஜித்தின் பக்கம் இருந்தமையே காரணம்

அமைச்சரவையில் முஸ்லிம்களை உள்ளீர்க்க முடியாது போனமைக்கு காரணம், சகல முஸ்லிம் கட்சிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் பக்கம் இருந்தமையே என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த முன்னணி முஸ்லிம் பிரமுகர்களை பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்புவிடுக்கவுள்ளோம். அதன் மூலம் அடுத்த அமைச்சரவையில் பலமான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 முஸ்லிம் கட்சிகள் கடந்த தேர்தலில் கோத்தாபயவுக்கு ஆதரவளிக்காதுவிடினும், அவருக்கு ஆதரவளித்த கணிசமான முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் அவர்கள் மூலமாக புதிய பிரதிநிதிகளை உருவாக்குவோம் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளுடன் இணைந்த கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திர மக்கள் கூட்டணியில் களமிறங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

1 comment:

Powered by Blogger.