Header Ads



மக்களின் பாதுகாப்புக்காக, சகல மாவட்டங்களிலும் இராணுவம் - அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (22) வௌியிடப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, பொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிப்பதற்காக 25 நிர்வாக மாவட்டத்தினை உள்ளடக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுவதற்கு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.