Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், எதுவும் இந்த ஆட்சியின்கீழ் இடம்பெறாது - துருக்கியிடம் இலங்கை உறுதியளிப்பு


இலங்கையில் இனக்கலவரத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இலங்கையில் பணிமுடிந்து செல்லும் துருக்கியின் தூதர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவை இன்று -30- சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.

இதன்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு எப்போதும் ஆதரவு வெளியிட்டு வருவதாகவும் துருக்கியின் தூதுவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கமல் குணரட்ன, திகன, கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் சம்பவம் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.



2 comments:

  1. YES! They can given assurance because they was CREATED those incidents for gets extremist Budhist's votes. ITS PUBLIC SECRET !!

    ReplyDelete
  2. ITS ALL UNP DRAMA...WHO GOT GREEN BLOOD IN THERE BODY NOT GOING TO KNOW THE TRUTH.

    ReplyDelete

Powered by Blogger.