Header Ads



படகுச் சவாரிக்கு சென்ற ரணிலுக்கு ஏமாற்றம்

தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊட்டியில் ஓய்வெடுத்து வருகின்றார். 

இந்நிலையில், அவர் அங்கு பல்வேறு சுற்றுலா இடங்களுக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, குன்னுாரில் படகு சவாரி செய்ய முடியாமல் ரணில் விக்ரமசிங்க ஏமாற்றத்துடன் திரும்பியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிம்ஸ் பூங்காவுக்கு சென்ற அவரை வரவேற்ற தோட்டக்கலை துறையினர் பூங்காவை சுற்றி காண்பித்தனர்.

அத்துடன், பூங்காவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரிகேரியா, போஜ்பத்தர், ருத்ராட்சம் உட்பட 60க்கும் மேற்பட்ட அரிய மரங்களின் விவரங்கள், பூங்காவின் வரலாறு குறித்து அவருக்கு விளக்கம் அளித்தனர்.

குன்னுாரில் நேற்று கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பூங்கா ஏரியில் ரணில் விக்ரமசிங்க படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதேபோல் குன்னுார் அருகே உள்ள லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாப்பகுதிகளை பார்வையிடாமல் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊட்டி திரும்பினார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.