Header Ads



பிரிட்டனில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட அழகிய பள்ளிவாசல் (படங்கள்)


பிரிட்டிஷ் நகரமான கேம்பிரிட்ஜில் துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்தோகான் ஒரு புதிய மசூதியை அதிகாரப்பூர்வமாக 06.12.2019 திறந்து வைத்தார்.

இது ஐரோப்பாவின் முதல் சுற்றுச்சூழல் நட்பு மசூதியாகும்.

இந்த மசூதியின் கட்டுமானப் பணி 2008 ஆம் ஆண்டில் தொடங்கியது அதற்கு தேவையான நிதியில் பெரும்பகுதியை துருக்கி அரசே வழங்கியது.

இந்த இறைஇல்லம் மழை நீரை சேமித்து இறைஇல்லத்தை சுற்றியுள்ள தோட்டங்களில் அமைந்துள்ள மரங்களுக்கும் இறைஇல்லத்தை சுற்றி அமைந்துள்ள வயல்களுக்கும் வினியோகிக்கும் அமைப்பில் கட்டபட்டுள்ளது.

மேலும் மழைநீரால் அதிகம் நண்மைகளை பெறும் விதத்த்தில் இந்த இறைஇல்லம் வடிவமைக்க பட்டுள்ளது

.பொருள் சுமை இல்லாமல் மற்றும் எந்தவிதமான உமிழ்வுகளையும் உற்பத்தி செய்யாமல் மின்சாரம் தயாரிக்க இறைஇல்லத்தின் கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.




5 comments:

Powered by Blogger.