Header Ads



அரசியலில் குழப்பம், எதிர்க்கட்சிக்குள் மோதல் - தேயிலை பயிரிடும் குமாரவெல்கம

அரசியலில் காணப்படும் குழப்பமான நிலைமை சீரடையும் வரை தற்காலிகமாக அரசியலில் இருந்து விலகி, பயிர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, மத்துகமையில் 125 ஏக்கரில் தேயிலை பயிரிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

வலுவான பொது எதிர்க்கட்சியை உருவாக்குவது மிகவும் முக்கியமான விடயம் என்ற போதிலும் எதிர்க்கட்சிக்குள் காணப்படும் மோதல்கள் காரணமாக அந்த வேலைத்திட்டம் சீர்குலைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வலுவான பொது எதிர்க்கட்சியை உருவாக்கும் தனது எதிர்பார்ப்பை கைவிடவில்லை எனவும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்கிய செயற்பாடுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கற்ற பாடங்களை பயன்படுத்தி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான பொது எதிர்க்கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவத்தை வழங்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் இடையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் முடியும் வரை காத்திருக்க நேர்ந்துள்ளது எனவும் பிரச்சினைகள் இருக்கும் போது பொது எதிர்க்கட்சியை உருவாக்க முடியாது எனவும் குமார் வெல்கம மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.