Header Ads



முஸ்­லிம்கள் பிழை­யான எண்­ணங்­களில் இருந்து, விடு­பட்டு எங்­க­ளுடன் இணைய ­வேண்டும்

முஸ்லிம் மக்கள் தவ­றான எண்­ணங்­களில் இருந்து விடு­பட்டு, எதிர்­வரும் தேர்­தலில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும். இன நல்­லி­ணக்கம் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வு இல்­லாமல் நாடொன்றை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்­துடன் கைகோர்த்­துக்­கொள்­ள­ வேண்டும் என நீதி, மனித உரி­மைகள், சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

பதுளை வெலி­மடை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லே யே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ வெற்­றி­பெற்ற பின்னர் அவரின் முத­லா­வது உரை­யின்­போது, எனது வெற்­றியின் பங்­கா­ளி­யா­கு­மாறு நான் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தேன். என்­றாலும் அவர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. அதனால் தற்­போ­தா­வது எம்­முடன் இணைந்து செயற்­ப­டு­மாறு அழைப்­பு­வி­டுக்­கின்றேன் என குறிப்­பிட்­டி­ருந்தார். ஜனா­தி­பதி தேர்தல் பெறு­பே­று­களின் பிர­காரம் எங்­க­ளுக்கு 120 ஆச­னங்­கள்­வரை பெற்­றுக்­கொள்ள முடியும்.

அதனால் முஸ்லிம் மக்கள் மீண்டும் சிந்­திப்­ப­தற்­கான வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. உங்­க­ளது உள்­ளங்­களை உங்கள் தலை­வர்கள் மாசு­ப­டுத்­தி­யுள்­ளனர். கோத்­தபாய ராஜ­பக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு நெருக்­க­டிகள் ஏற்­படும் என அவர்கள் உங்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். என்­றாலும் அவ்­வாறு எதுவும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. இந்த அர­சாங்கம் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்கு போன்று தமிழ்–முஸ்லிம் மக்­க­ளதும் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும். மீண்டும் நாட்டில் குண்டு வெடிக்­கப்­போ­வ­தில்லை. 

அத்­துடன் நாட்டில் முஸ்லிம் மக்­களே அதிகம் வியா­பாரம் செய்­கின்­றனர். தற்­போது அர­சாங்கம் வற் வரியை குறைத்­துள்­ளது. அதன் நன்­மைகள் அனைத்து மக்­க­ளுக்கும் கிடைக்­கப்­பெறும். அதனால் முஸ்­லிம்கள் பிழை­யான எண்­ணங்­களில் இருந்து விடு­பட்டு, எதிர்­வரும் தேர்­தலில் எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும்.

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் மற்றும் மத சக­வாழ்வு அத்­தி­யா­வ­சி­ய­மாகும். இன நல்­லி­ணக்கம் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சகவாழ்வு இல்லாமல் நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. அதனால் இன மற்றும் மத நல்லிணக்கத்தை நடைமுறையில் காட்டவேண்டும். அதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த அரசாங் கத்துடன் இணைந்துகொள்ள முன்வர வேண்டும் என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.