Header Ads



ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் என, நடிப்பவர்களிடம் விழிப்பாக இருங்கள் - உடனே முறையிடுங்கள்

ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக இல்லாவிடின் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடிகளில் ஈடுப்படும் நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

இவர்கள் தொடர்பில் கண்டறிந்து கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. 

இவ்வாறு ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்புச் அமைச்சு பொது மக்களை கேட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

இந்த மோசடி மற்றும் சட்டவிரோத அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்தால் அது தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவிக்க முடியும். 

தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
மேல் மகாணம் - 0718591017 

ரவி விஜேகுணவர்தன சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
வடமாகாணம் - 0718591009 

எஸ்.எம்.விக்ரமசிங்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
மத்திய மாகாணம் - 0718591001 

ரொசான் பெர்னாண்டோ சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
தென் மற்றும் சப்ரகமுவ மாகாணம் - 0718591028 

நந்தன முனசிங்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
வட மத்திய மற்றும் வடமேல் மாகாணம் - 0718591008 

டபிள்யூ.எப்.யூ.பெர்னாண்டோ சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
ஊவா மாகாணம் - 0718591011 

லலித் பத்திநாயக்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
கிழக்கு மாகாணம் - 0718591985 

மேலும் கொழும்பு நகரில் இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட்டால் அது தொடர்பில் கீழ்வரும் இலக்கங்களை அழைத்து அறிவிக்க முடியும். 

பணிப்பாளர் - கொழும்பு மோசடி விசாரணை பிரிவு
பொலிஸ் அதிகாரி - டபிள்யூ.எல்.ஜே.ரஸல் டி செய்சா.
தொலைப்பேசி இலக்கம் - 0718591736 

அதேபோல் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் பின்வரும் இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்க முடியும். 

1.119 

2.பொலிஸ்மா அதிபர் கட்டளையிடும் தகவல் பிரிவு - நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி
தொலைப்பேசி இலக்கம் - 011-2854885.

No comments

Powered by Blogger.