Header Ads



மஹிந்தவுக்கும், சஜித்துக்கும் ஒரே இலக்கத்தில் ஆசனம்

நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளனவெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தவல, ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வது தொடர்பாக முறையாக விண்ணப்பம் செய்யாது, தொலைபேசிகளின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.

ஆசன ஒதுக்கீட்டின் பிரகாரம் சபாநாயகருக்கு வலதுபுறத்தில், முன்வரிசையிலிருக்கும் எட்டாவது ஆசனம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையிலிருக்கும் ஏ​ழாவது ஆசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எதிரணியில் முதலாவது வரிசையில் ஏழாவது ஆசனம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதித் தேர்தலில் போது, ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர், வசந்த சேனாநாயக்க ஆகிய இருவரும் ஆளும் தரப்பினர் வரிசையிலும், சுயாதீனமாக செயற்பட்ட குமார் வெல்கம எம்.பி, எதிரணியின் வரிசையிலும் ஆசனங்களை ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.