Header Ads



மாகாண சபை தேர்தலை பழைய, முறையில் நடாத்த அரசியல் கட்சிகள் இணக்கம்

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சித் தலைவர்கள். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியளவில் நடாத்த கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். 

ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின், குறித்த தினத்தில் பாராளுமன்ற தேர்தலை நடாத்த கூடிய வாய்ப்பு காணப்படுவதாக இந்த கலந்துரையாடலின் போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாக மனோ கணேசன் தெரிவித்தார். 

அதேபோல், எல்லை நிர்ணயம் நடவடிக்கைகள் இதுவரையும் முறையான நிலையில் இல்லாமையினால், மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைக்கே நடாத்த அனைவரும் உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. கையால படங்காட்டும் மாமாட சொந்த பேயறைந்த மாதிரி இருக்கே."சும்மா மடையன் மாதிரி கதைக்கப்போடா" நல்ல டயலொக்.
    தோட்டக்காட்டு மக்களின் அறியாமையிலும் அவர்களது வியர்வையிலும் சவாரி செய்யும் பேய்களுக்கு ஏண்டா press conference? முந்திரிக்கொட்டை மாதிரி.

    ReplyDelete

Powered by Blogger.