Header Ads



"காட்­டு­மி­ராண்­டித்­த­ன­ IS கொலை­யா­ளிகள் இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தில்லை"


மேற்கு ஆபி­ரிக்க நாடான நைஜீ­ரி­யாவில் 11பேர் தீவி­ர­வா­தி­களால் கொன்று குவிக்­கப்­பட்ட விவ­காரம் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்­பாக்­தாதி கொல்­லப்­பட்­ட­தற்­கான பழி­வாங்கல் என ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பின் கிளைக் குழு அறி­வித்­துள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யா­கிய காணொளி ஒன்றில் ஒருவர் துப்­பாக்­கியால் சுடப்­பட்டும் மற்­றை­ய­வர்கள் 10 பேரும் தலை துண்­டிக்­கப்­பட்டும் கொல்­லப்­ப­டு­வதாக காட்சிகள் அமைந்திருந்தன. இவர்கள் நைஜீ­ரி­யாவின் வட­கி­ழக்கு மாநி­ல­மான போர்­னோவில் உள்ள மைடு­குரி மற்றும் டம­துரு ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து சிறை­பி­டிக்­கப்­பட்­ட­தாக கூறப்படு­கி­றது.

இந் நிலையில் இச்­சம்­ப­வ­மா­னது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதால் இதற்கு நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹாரி கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள கண்­டன செய்­தியில், 

'நைஜீ­ரிய மக்கள் தங்­களை மத அடிப்­ப­டையில் பிரிக்க வேண்டாம். எந்த சூழ்­நி­லை­யிலும் பயங்­க­ர­வா­திகள் கிறிஸ்­த­வர்­களை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திருப்­பு­வதன் மூலம் எங்­களை பிள­வு­ப­டுத்­தக்­கூ­டாது. ஏனென்றால் இந்த காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான கொலை­யா­ளிகள் இஸ்­லாத்­தையும் உல­கெங்­கிலும் உள்ள மில்­லியன் கணக்­கான பிற சட்­டத்தை மதிக்கும் முஸ்­லிம்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தில்லை' என குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் அமெரிக்க படையினர் மேற்கொண்ட விசேட தாக்குதலில் சிரியாவின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூக்கர் அல்பாக்தாதி மற்றும் அபுல்-ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.