December 21, 2019

தமிழ் மக்கள் விடயத்தில், மோத வேண்டாம் - அம்பாறையில் கருணா எச்சரிக்கை

- பாறுக் ஷிஹான் -

காணிகளை அபகரிப்பது, கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை  நிறுத்திக்கொள்ள வேண்டும்.அதனை தடுக்க எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு  கலாச்சார மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(20) மாலை   மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில்

எல்லா மக்களும் தமிழராக அணிதிரண்டு நிற்க வேண்டும் அதுவே நமது இலக்கு. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் ஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு கருணா அம்மான் நிச்சயம் தேர்தல் போட்டியிட வேண்டும் என்று சொன்னார் நான் சொன்னேன் உங்களுடைய கட்சியிலிருந்து நான் தேர்தலில் நிற்க மாட்டேன். ஒரு முஸ்லிமை வெற்றி பெறச் செய்ததற்காக என்னை தேர்தல் கேட்கிறீர்களா என்று கேட்டேன். நிச்சயம் போட்டியிட்டுத் தான் ஆக வேண்டும் என கூறினார். தேர்தலில் நிற்க  முடியாது என்று ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினேன்.

இதில் நடந்தது என்ன தமிழ் வேட்பாளர்களின் வாக்குகளை பெற்று ஹிஸ்புல்லாவும்  அமீர் அலியையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி விட்டனர்.அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் நான் வெளிப்படையாக அறிக்கை விட்டேன் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று  ஏனெனில் அந்த நேரம் நிலைமை அவ்வாறு இருந்தது.

 பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எனது வீடு தேடி வந்து அந்த தேர்தலில் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 
வரலாற்றில் ஒருநாள் மறக்கக்கூடாது உடனே ஆதரவாளர்களையும் அனைவரையும் திரட்டி கூறினேன் அவரை வியாழேந்திரனை  வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவரை வெற்றி பெறச் செய்தோம். அப்படித்தான் நாம் இருக்க வேண்டும்.

எப்போதும் நாம் தனித்துவமாக வருகின்றோம். நமக்கு அதிகாரமும் வேண்டும் உரிமையும் காப்பாற்ற  வேண்டும் அவற்றுக்கு ஏற்றார்போல காய் நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் அதேபோல்  தான் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் .
இதில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் இதையே  உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். 

அம்பாரை மாவட்டம் தற்போது எழுர்ச்சி கண்டு வருகின்றது நான் உங்களிடம் ஒரு விடயத்தை முன் வைக்க விரும்புகின்றேன் உங்களுக்காக என் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றேன். உங்கள் முன் நின்று பேசுகின்ற என்றால் என் உடம்பிலும் பல விழுப்புண்கள் இருக்கின்றன.நான் இறந்து  பல காலம் ஆகிவிட்டது விட்டேன் இனி இறப்பதற்கு  ஒன்றுமில்லை.
எங்களுடைய தமிழ் மக்கள் விடயத்தில் மோத வேண்டாம் உங்களுடைய நிலைப்பாட்டில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள் இல்லையேல் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை  நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  ஆதரவாளர்கள்  உடனிருந்தனர்.

10 கருத்துரைகள்:

😆😆😆😆😆😆😆😆😆😆😆

இன்று சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நாள் சிங்களவர்கள் கைகளாலேயே இந்த நாய் அடிபட்டு சாவான்

LTTE padayinar yuddhatthai thoakka kaaraname nee thanda. Thannudaya theawaikkaga nanbargalai kaatikkuduttha nee peasugiraya. MANAM KETTAWANE

இலங்கையின் அரசியல் வாதிகளுக்கு இனவாதம் தலைக்கடித்து விட்டது. நாடு மிக விரைவில் சாம்பலாகி விடும்.

இவன் பல பேரை கொன்றவன் இவனுடைய மனசாட்சி இவனையே கொன்று விட்டது. நீ சும்மா படம் காட்டுவதை நிறுத்துடா கொலையாளி.

பாசிசம் உச்சந் தலையில் அடித்துவிட்டது.போராட்டம் என்ற போர்வையில் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்தது மட்டுமன்றி அம்மான் என்ற பட்டத்துக்காக தன் இனத்தையும் கொன்றொழித்து மாற்றுக் குழுக்களையும் வேரறுத்து விட்டு வெளியேறி தமிழினத்துக்கே துரோகம் செய்த சண்டாளன்..

LTTE pulipanditrihal alikkapadawendum

Thanks to Karuna..
Plz consider the violations happebed by muslims since 2000s and do the needful to get justice for Tamol victoms

DEI TAMIL DROGI ANUSH this son of the bitch KARUNA end will be like prabakaran do you think that sinhala people wil forgive you and forget the DALADa MALIGAWA ATTACK? after getting higher majority in parliament for this government every LAW will be change then their plan to rule minimum 20 years wait and see till election results. this TAMIL TRAITOR cranium will taste of bullet.

Post a Comment