Header Ads



ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடித் தீர்மானம் - நாட்டு மக்களுக்கு ஒரே குடையின் கீழ் பயன்


அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இதனூடாக நேரம், மனிதவலு மற்றும் பெருமளவு பணம் விரயமாகுவதைக் குறைக்க முடியுமென தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரே தகவல்களை பல நிறுவனங்களில் சேகரிக்கும் முறையே தற்போது பாவனையில் உள்ளது. அவற்றை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதனூடாக தாமதங்களை தவிர்த்து வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் போலியான மற்றும் மோசடித் தகவல் பரிமாற்றங்களையும் இதனூடாக தவிர்க்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகள் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே குறித்த நிறுவனங்களை ஒரே வலையமைப்பில் இணைப்பதன் ஊடாக உயர்ந்த பயனுறுதியை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் அத்தகைய செயற்திட்டங்களை அவற்றின் பயனுறுதிக்கு நேரடியாக பொறுப்புக்கூறும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களிடம் கையளித்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

1 comment:

Powered by Blogger.