Header Ads



புத்தளம் நகர கிளையின், ஜம்இய்யாவின் புதிய நிர்வாகசபை கூட்டம்

புத்தளம் நகர கிளையின் ஜம்இய்யாவின் புதிய நிர்வாக சபை கூட்டம் நேற்றிரவு ஜம்இய்யாவின் காரியாலயத்தில் இரவு  8 மணிக்கு புதிய தலைவர் அஷ்ஷைக் அல்ஹாபிழ் அல்காரி முஹம்மது ரியாஸ் தேவ்பந்தி ஹஸ்றத் தலைமையில் ஆரம்பமானது.

ஆரம்பமாக தலைவர் தனது ஆரம்ப கண்ணியுரையில் தான் கடந்து வந்த பாதை பற்றி கூறினார்கள் 
நான் சொந்த ஊரான புல்மோட்டையை விட்டு கல்விக்காக சிறு வயதில் இருந்து பிரிந்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கல்வி கற்று தாய் நாட்டுக்கு வந்து புத்தளம் மண்ணில் இரண்டு தசாப்த காலமாக பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்து அம்மத்ரஸாவில் இருந்து பல ஹாபிழ்களை உருவாக்க கிடைத்ததும் மேலும் ஜம்இய்யாவுடன் இணைந்து மதிப்புக்குரிய மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் அப்துல்லாஹ் ஹஸ்றத்துடைய சிறந்த வழிகாட்டலில் உப தலைவராக இருந்து பணி செய்ய வாய்ப்பு கிடைத்தமையும் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன் .என்றார்.

அத்துடன் புத்தளம் வாழ் சகோதரர்கள் என்னுடன் தன் உறவைப் போலவே இதுவரை நேசித்து வருகின்றனர் நான் எல்லோருடனும் நடு நிலையாக நடந்து கொண்டு வருகிறேன். அது போலவே ஜம்இய்யாவின் அனைத்து நிர்வாகிகளான கண்ணியமிக்க உலமாக்கள் அனைவரும் நடு நிலமையாக நடந்து கொள்வதும் மாற்று கருத்துள்ள சகோதர உலமாக்களின் கருத்துக்களை மதிப்பதும்,அத்துடன் ஜம்இய்யாவுக்குள் இருக்கின்ற, மற்றும் வெளியில் இருக்கின்ற சகோதர உலமாக்களயும் உள்வாங்கி அவர்களுடைய திறமைகளை சமூகத்துக்கு ஜம்இய்யா ஊடாக பயனளிக்கச்செய்வது பற்றியும் முன்வைத்தார்.

மேலும் நாம் முன்னாள் புத்தளம் பிராந்திய தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் ஹஸ்றத் அவர்களுடை மஷூறாக்களை பெற்று பயனிப்பதுடன், ஹஸ்றத்துடைய ஆதங்கங்களை இவ்வாண்டில் திட்டமிட்டு நாம் நிறை வேற்ற முயற்சிப்பதும் காலத்தின் தேவை என முன் வைத்தார் 

மேலும் நாம் எல்லோரும் திறந்த உள்ளத்துடன் அல்லாஹ் தந்த சந்தர்பத்தை பயன்படுத்துவோம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவரகள் சொன்னார்கள் இந்த ஆட்சியை அல்லாஹ் தஆலா வழங்கியது நான் நன்றி பாராட்டுகிறேனா அல்லது அலட்சியம் செய்கிறேனா என்பதை சோதிக்கவே தந்துள்ளான் என்று கூறினார்கள்.

 எனவே நாம் அனைவரும் சுமந்த இப்பொறுப்பை சரியாக நிறைவேற்ற முயற்சிப்போம் நிர்வாக நியதியின்படி நான் தலைவராக இருந்தாலும் நானும் மனிதன் என்கிற வகையில் தவறிளைக்கின்ற சமையம் முறையாக என்னை சரி செய்யுங்கள் அல்லாஹ் தஆலா நம்  அனைவரையும் கபூல் செய்வானாக  என்று தன்னுடைய தலைமையுரையை முடித்தார்.

No comments

Powered by Blogger.