Header Ads



மீண்டும் இறங்குகிறார், குமார வெல்கம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, வலுவான பொது எதிர்க்கட்சியை உருவாக்க அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளையும் இணைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த பொது எதிர்க்கட்சியை உருவாக்க எண்ணியுள்ளதாக குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா பொதுன பெரமுன உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பண்டிகை காலம் முடிந்த பின்னர் ஜனவரி 3ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக விரிவான வலுவான பொது எதிர்க்கட்சியை உருவாக்குவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசாங்கம் எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை கெடுதியான தீர்மானங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து, மக்களுக்காக எதிர்காலத்தில் செயற்பட வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது அத்தியவசியமானது.

இதனடிப்படையில், எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.