Header Ads



பிரிகேடியர் பிரியங்கர விவகாரம் - அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்


பிரிட்டனின் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அவரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளது.

பிரிட்டனிற்கான  இலங்கை தூதரகத்தில் 2018 இல் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நோக்கி மரண அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம் பிரிகேடியர் பெர்ணான்டோ குற்றமிழைத்தார் என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் அபராதமும் விதித்துள்ளது.

 எனினும் இந்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்ற ஒழுங்கு  இது ஒரு அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்துகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைகள், பிரிகேடியர் பெர்ணான்டோவின் இராஜதந்திர விடுபாட்டுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை,பிரிட்டனின் தேர்தல் வேளையில் தீர்ப்பு வெளியாகியுள்ளமை,வழக்கு விசாரணைகள் இடம்பெற்றவேளை வழக்கு தொடுநரின்  ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை  ஏந்தியவாறு நீதிமன்ற வழக்குகளின் போது அடாத்தான விதத்தில் , அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டமை,வழக்கு தொடுநரினால்  நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய விபரங்கள் பகிரங்கமாகியமை,போன்ற சம்பவங்கள் இது அரசியநோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்தியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.