Header Ads



எந்நேரமும் ராஜித கைது செய்யப்படலாம் - கம்பி எண்ணுவாரா..?

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, இந்த முன் பிணை மனுவின் ஊடாக மனுதாரர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்படவுள்ள குற்றம் தொடர்பில் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படாமையினால் குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திற்கு முடியாது என குறிப்பிட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை வௌியிடுவதையும் நிராகரித்து தனது தீர்ப்பினை அறிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். 

எவ்வாறாயினும், குறித்த முன் பிணை கோரிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதான நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Your only was barking last 5years.see how gotha acting ??

    ReplyDelete

Powered by Blogger.