December 23, 2019

சவூதிக்கு பிழைக்கப்போய் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியவன் கைது

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்துத்வா ஆதரவாளருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

மதச்சார்பற்ற நாடாக விளங்கி வரும் இந்தியாவை இந்துராஷ்ட்ராவாக மாற்ற முயலும் செயல்களில் BJP, RSS தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினர்களை ஒதுக்கிவிட்டு இந்தியாவை இந்து நாடாக மாற்றும் விதமாக பல்வேறு சட்டவிரோத செயல்களையும், சட்டங்களையும் மாற்றியமைத்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு.

இதற்கு நாடெங்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும் பா.ஜ.க.,வின் செயல்பாடுகள் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சவூதியில் உள்ள தம்மம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வரும் கர்நாடகா குந்தாப்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பங்கேரா என்ற நபர், இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்கும் மெக்கா காபாவை இழிவுபடுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கடந்த டிசம்பர் 21ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அதில், “இந்து அன்பர்களே அடுத்த ராமர் கோவில் மெக்காவில்தான். அதற்கு தயாராகுங்கள். ஜெய் ஸ்ரீராம். மோடி நம்முடன் இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். ஹரிஷ் பங்கேராவின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.

அதேபோல், சவூதி மன்னர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் ஹரிஷ் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிழைக்கப் போன இடத்தில், அதுவும் முஸ்லிம் நாட்டில் இதுபோன்ற பதிவிட்டு மெக்காவை இழிவுபடுத்தியது தொடர்பாக சவூதி தம்மம் போலிஸாருக்கு புகாரளிக்கப்பட்டதை அடுத்து ஹரிஷ் பங்கேரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக ஹரிஷ் பங்கேரா பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவரின் ஒப்பந்தத்தையும் நீக்கி உள்ளதாக அவர் பணிபுரிந்து வந்த Gulf Carton Factory Co நிறுவன பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரிஷ் பங்கேராவின் ஃபேஸ்புக் கணக்கை சவூதி போலிஸார் முடக்கியுள்ளனர். இருப்பினும், ஹரிஷின் மெக்கா குறித்த சர்ச்சை பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு மக்களை மத ரீதியாக பிரித்து வெறுப்பு அரசியலை தேடும் பா.ஜ.க.,வினருக்கு மற்ற நாடுகளில் உள்ள இந்துக்களும் இதே போன்று துன்புறுத்தல்களை அனுபவிக்கமாட்டார்களா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

8 கருத்துரைகள்:

இவனின் தலையை துண்டித்து மரண தண்டனை வழங்குவதன் மூலம் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க போனால் எப்படி வாழவேண்டும் என்று இனவாதிகளுக்கு ஒரு பாடத்தை கற்று கொடுக்க வேண்டும்

Ajan,உமக்கு எதிராக ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட ஹரீஸ கிளம்பினான். நல்ல வேளை கைது செய்யப்பட்டான்.American FEW research internationalநிறுவன ஆய்வு அறிக்கையை வாசித்துப் பாரும்.
2070 ஆம் ஆண்டாகும் போது உலக சனத்தொகையில் கிறஸ்தவர்களும் முஸ்லிம்களும் 32.3% என்ற சம விகிதாசாரத்தை கொண்டிருப்பர் என்றும் 2100 ஆகும் பொது முஸ்லிம்கள் 40% ஐ எட்டுவார்கள் எனவும் கண்கிட்டுள்ளது. இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது.

Humble request my bro & sist. for working in islamic countries-we must want identify terror like as above.and however take action immediately

சவுதீ முசுலீ்ம் நாடு இந்தியா மத சாா்பற்ற நாடு முசுலீம்கு வந்தால் ரத்தம் இந்துவுற்கு வந்தால் தக்காளி சட்டினி

கைது செய்து மட்டும் போதாது அங்கே அவருக்கு ராஜா சாப்பாடும் சிறந்த முறையில் கொடுக்க வேண்டும் அப்போது தான் அந்த விருந்து உபசாரம் அவரும் மறக்கமாட்டார் மற்றவர்களுக்கும் அது நல்ல படிப்பினையாக அமையும்.

Mr. Pilla,உமக்கு சாதாரண அறிவு( common sense) இருந்தால் யோசித்துப் பாரும்.எங்காவது எப்போதாவது ஒரு முஸ்லிம் மற்றைய மதத்தவர்களை நிந்தித்துள்ளாரகளா?
அப்படியாயின் ஏன் இந்த இலங்கை தமிழர்களுக்கு இவ்வளவு கொலைவெறி?
அதற்குள் நீரும் சடனி, சாம்பார் கதை விடுகிறீர.

இது அனைத்து இனவாதிகலுக்கும் ஒரு பாடம்.பிழைக்கப் போனால் பிழைப்பு நடத்தும் வழியை மட்டும் பார்க்க வேண்டும்.

மாஷா அல்லாஹ்.
ஷரீஆவில் என்ன தண்டனையோ தெறியாது இவருக்கு.
தமாம் அண்பர்கள் இதுபற்றி அப்டேட் பண்ணுங்கள்.
குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர், அதுதான் இந்த ஜென்மங்க்ஃளின் அறிவு.
இவர்களுக்கெல்லாம் சிறுவயதில் தடுப்பூசி சரியாக ஏற்றப்படவில்லை.

Post a Comment