Header Ads



சஜித் ஏன் நம்பிக்கையீனமான, கருத்துக்களை வெளியிடுகின்றார் என புரியாதுள்ளது

(நா.தனுஜா)

கட்சியில் அனைவரதும் உடன்பாட்டுடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. அவ்வாறிருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் அவர் ஏன் நம்பிக்கையீனமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று எமக்குத் தெரியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -30- செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் முடிவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டைப் பிரிக்கும் விதமாகவும், நாட்டிற்குக் கேடான வகையிலும் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் ஆர்பாட்டங்களைக் கூட மேற்கொண்டார்கள். 

மாநாயக்க தேரர்களின் சிலரும் கூட அவர்களுக்கு ஆதரவாகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அனைவரின் நிலைப்பாடும் மாறியிருக்கிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறியவர்கள்அதன் விளைவாகவே அனைத்தையும் இழப்பார்கள் என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.